பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கிற்கு பிறகு குறையுது கொரோனா: சுகாதார செயலர்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
பெரம்பூர்: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா பரவல் விகிதம் குறைய துவங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பூரில் அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை
Health Secretary, Radhakrishnan, Lockdown, Covid, TN, சுகாதாரத்துறை, செயலாளர், ராதாகிருஷ்ணன், முழு ஊரடங்கு, கொரோனா, பரவல்

பெரம்பூர்: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா பரவல் விகிதம் குறைய துவங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பூரில் அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் அரசு புறநகர் மருத்துவமனையில் புதிய கொரோனா அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர்.

அப்போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:


latest tamil news


தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த கொரோனா பரவல் விகிதம், கடந்த சில நாட்களாக முழு ஊரடங்குக்கு பிறகு பரவல் விகிதம் குறைந்துள்ளது. மக்களுக்கு எந்தவித பாதிப்பு இன்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றோம். இந்த 2வது அலையில் இளைஞர்கள் பலரும் அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக வந்து பரிசோதனை மேற்கொள்கின்றனர். இந்த விழிப்புணர்வை தான் சுகாதாரத்துறை செய்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangarapandi - coimbatore,இந்தியா
19-மே-202109:13:35 IST Report Abuse
sangarapandi கொரோனா பரவல் விகிதம், கடந்த சில நாட்களாக முழு ஊரடங்குக்கு பிறகு பரவல் விகிதம் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியது மக்கள் நம்பிக்கையாக இருப்பதற்காகத்தான்.
Rate this:
Cancel
nava - திண்டுக்கல்,இந்தியா
13-மே-202101:32:31 IST Report Abuse
nava தமிழகத்தில் மேலும் 30,355 பேருக்கு கொரோனா: 293பேர் உயிரிழப்பு d : மே 12, 2021 20:05
Rate this:
Cancel
12-மே-202119:44:11 IST Report Abuse
ஆப்பு நிலைமை கையை மீறிப் போச்சா இல்லியா? அதைச் சொல்லுங்க.
Rate this:
skandh - Chennai,இந்தியா
12-மே-202122:18:12 IST Report Abuse
skandhஇவர் போய் சொல்லுகிறார்.வழக்கமாக DAILY CASES 1000 வீதமாக அதிகரிக்கிறது . நேற்று 400 ஆக இருந்தது . அதுவே இன்று மீண்டும் 1000 க்குமேலே போகிட்டது .இப்படித்தான் போய் சொன்னால்தான் பேப்பரில் கொரோனாவை இவர்களால் கொன்றோல் செய்ய முடியும். உண்மையில் நிரூபிக்கட்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X