இந்தியாவில் உருமாற்றமடைந்த வைரஸ் 44 நாடுகளில் கண்டுபிடிப்பு

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஜெனிவா: இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்தான். கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் இது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தற்போது 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற

ஜெனிவா: இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்தான். கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் இது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தற்போது 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.



latest tamil news




உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுகிறது. 'ஒரிஜனல்' கொரோனா வைரஸ் தவிர்த்து, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்காவில்தான் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 'ஒரிஜினல்' கொரோனா வைரஸ்களைவிட அதிகமான ஆபத்து நிறைந்ததாகவும், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.


latest tamil news




அதிலும் இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 வகை உருமாறிய வைரஸ்கள் 'ஒரிஜனல்' வைரஸைவிட, அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால்தான் உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவுகின்றன. தற்போது இது 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.முதல்கட்ட ஆய்வுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள், அதிகமான சக்தி உள்ளதாகவும், தடுப்பூசிகளையே எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகளால் குறைந்த அளவுதான் உருமாறிய கொரோனா வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க முடிகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202106:25:54 IST Report Abuse
ஆப்பு தப்பு.. தப்பு .இந்தியா கொரோனான்னு சொல்லக்கூடாது
Rate this:
Cancel
12-மே-202122:32:52 IST Report Abuse
ஆப்பு கைலாசத்துலே பரப்ப முடியாது. இந்தியர்கள் அங்கே செல்லத்தடை.
Rate this:
Cancel
12-மே-202121:53:11 IST Report Abuse
பேரறிவாளன் குல்லாஸ் கோரோணான்னு ஒன்னு இல்லன்னு வதந்தி பரப்பிட்டிருக்காணுக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X