பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Updated : மே 16, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் (72) கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் (வயது 72) கே.கே நகர் 42வது செக்டரில் வசித்து வந்தார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது. சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில்
FormerCBI, InvestigationOfficer, Ragothaman, Dies, Corona, Covid, சிபிஐ, ரகோத்தமன், கொரோனா, உயிரிழப்பு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் (72) கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் (வயது 72) கே.கே நகர் 42வது செக்டரில் வசித்து வந்தார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது. சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (மே 12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயது மூப்பின் காரணமாக கொரோனா தாக்கத்தில் இருந்து மீளமுடியாமல் அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டூருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்படுகிறது.


latest tamil news


36 ஆண்டுகளாக சிபிஐ.,யில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரகோத்தமன், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர், ராஜிவ்கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அத்துடன் ராஜிவ் கொலை குறித்து ஊடக விவாதங்களில் பங்கேற்று கருத்துக்களை கூறி வந்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12-மே-202121:06:53 IST Report Abuse
Sanny Hats off சார் உங்க நேர்மையை அப்போதைய அரசு கட்டு போட்டுவிட்டது ராஜிவ் கொலையில், உங்களிடம் என்னைப்போல பலர், பலவிடயங்களை கற்றுகொண்டுளோம். ஆத்மா நிட்சயம் சாந்தி அடையும்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
13-மே-202109:56:24 IST Report Abuse
Girijaஉண்மையை பதவிக்கும் சம்பளம் பென்ஷன் அரசு ஒதுக்கீட்டில் பெறுவதற்கும் மறைத்தலா ? ஒரு சி பி ஐ இன்ஸ்பெக்டர் தஞ்சாவூர் என்று நினைக்கிறன் ராஜிவ் கொலை வழக்கு உண்மை வெளி வரும்வரை நான் பணிக்கொடை எதுவும் பெறமாட்டேன் என்று வீடு வாசலில் போர்டு மாட்டி வாழந்து வருகிறார். விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள் உண்மையை ....
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
12-மே-202119:45:38 IST Report Abuse
Nesan விசயம் தெரிந்த மனிதர். மனதில் பட்டத்தை சொல்லும் தைரியசாலி. உங்கள் மறைவு, தமிழகத்திற்கு இழப்பு. அன்னாரின் ஆன்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
12-மே-202119:13:03 IST Report Abuse
Girija சி பி ஐ காவலில் இருந்த தூத்துக்குடி சண்முகம் எப்படி இறந்தார் ? இதற்கு ரகோத்தமன் இதுவரை உண்மையை சொல்லவில்லை அங்கு அவர்தான் விசாரணை செய்துவந்தார் .சிவராசனை சுற்றிவளைத்தபோது கார்த்திகேயன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார் ஏன் ? கடைசிவரை சிவரசனை சுட்டு பிடிக்கும்வரை பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஹர்லங்கார் அழைப்புகளை ராஸ் போனில் தவிர்த்தார் கார்த்திகேயன். ராஸ் போன் என்பது ஹாட் லைன் ஐ விட அவசரமானது, அழைப்பை உடனே ஏற்கவேண்டும் எனபது விதி. சயனைடு விஷத்தை முறியடிக்கும் ஆன்டி சீரம் முன்னேற்பாடாக தமிழகத்தில் இருப்பு அல்லது சி பி ஐ அதிரடிபடையிடம் ஏன் முன்கூட்டியே கொடுத்து வைக்கவில்லை ? செய்தித்தாள் களில் விளம்பரம் போல சி பி ஐ யின் ஒட்டு மொத்த தினசரி நடவடிக்கைகள் மற்றும் அடுத்து என்ன செய்யபோகின்றனர் என்பதெல்லாம் வருவதை ஏன் தடை செய்யவில்லை ? இந்த வழக்கு, போபர்ஸ் வழக்கு, 2 ஜி வழக்கு , நிலக்கரி ஊழல் வழக்கு, சீமான் சிதம்பரம் மற்றும் மைந்தன் மீது உள்ள வழக்குகளை விசாரித்த சி பி ஐ சிரிப்பு போலீஸ் போல் தோன்றுகிறது . இந்த ஏழு பேர்கள் முழுஅப்பாவி கிடையாது ஆனால் விஷயம் தெரியாமல் துணை போனவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X