பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் இதுவரை 30 கோடி பரிசோதனை; 17.52 கோடி பேருக்கு தடுப்பூசி!

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் இதுவரை 30 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனையும் 17.52 கோடி பேருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா

புதுடில்லி: நாட்டில் இதுவரை 30 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனையும் 17.52 கோடி பேருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:



latest tamil news


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,33,40,938 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 4,205 பேர் உயிரிழந்துள்ளனர்; இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,54,197 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 37,04,099 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இன்று 3,55,338 குணமடைந்த நிலையில் இதுவரை 1,93,82,642 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்ட் தடுப்பூசிகள் இதுவரை 17 கோடியே 52 லட்சத்து 35 ஆயிரத்து 991 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 24.46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 66.61 லட்சம் பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.


latest tamil news



மூன்றரை ஆண்டுகள் ஆகும்!


இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.,) தரவுகளின்படி, மே 11ம் தேதி வரை 30,75,83,991 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய வேகத்திலே தடுப்பூசிகள் போடப்பட்டால் 70 சதவீதம் மக்களை சென்றடைய குறைந்தது இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X