பேரழிவு விளைவுகளை கணிப்பதில் அரசும், தேர்தல் ஆணையமும் தோல்வி: உயர்நீதிமன்றம் வேதனை

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
லக்னோ:கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் சில மாநிலங்களிலும் , பஞ்சாயத்து தேர்தல் நடந்த உ.பி.,யிலும் தேர்தல் நடத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளை கணிக்க தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அரசுகள் தவறிவிட்டதாக அலகாதாப் உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.உ.பி.,யின் காஜியாபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி
கொரோனா, நீதிமன்றங்கள், அரசுகள், அலகாபாத் உயர்நீதிமன்றம்,

லக்னோ:கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் சில மாநிலங்களிலும் , பஞ்சாயத்து தேர்தல் நடந்த உ.பி.,யிலும் தேர்தல் நடத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளை கணிக்க தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அரசுகள் தவறிவிட்டதாக அலகாதாப் உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

உ.பி.,யின் காஜியாபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் கூறுகையில், உ.பி., நகர்ப்புறங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மிகுந்த சிரமப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதும், பரிசோதனை நடத்துவதும் கடினமாக உள்ளது.

முதல் அலையின் போது, உ.பி.,யின் கிராமங்களுக்கு அதிகமாக கொரோனா பரவவில்லை. ஆனால், 2வது அலையில் அதிகமாக பரவிவிட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , அரசு போதுமான அளவு தன்னை தயார்படுத்தவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.


latest tamil news



சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஏராளமான மககள் மீதுவழ்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் கிராமங்களில் குற்றங்கள் பதிவாவது அதிகமாக உள்ளது. பஞ்சாயத்து தேர்தல் முடிந்த பின், அனைத்து கிராமங்களிலும் உள்ள சூழலையும் மனதில் வைத்து பார்த்தவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் மற்றும் அவர்கள் பாதிக்கப்பட்டு தொற்று கண்டறியப்படாமல் இருக்கலாம்.

கொரோனா காலத்தில் சில மாநிலங்களிலும், உ.பி.,யிலும் தேர்தல் நடத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளை கணிக்க தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் அரசுகள் தவறிவிட்டன என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
13-மே-202105:39:01 IST Report Abuse
iconoclast இந்த காவிக்கூட்டத்துக்கு யாரு புத்திமதி சொன்னாலும் பிடிக்காதே
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
13-மே-202102:11:47 IST Report Abuse
தல புராணம் எட்டுக்கட்டமா கட்டம் கட்டி கும்பமேளா வைரஸை பரப்புறதிலே எல்லா இடங்களும் பாஜாக்காவுக்கும், பாஜாக்காவின் அடிமையாக செயல்பட்ட தேர்தல் ஆணையத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது ..
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
13-மே-202111:44:43 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுகும்பமேளாவில் கூடியது தவறுதான் ஆனா கூட்டுப் பிரார்த்தனையை கைவிடமாட்டோம்ன்னு நோயைப் பரப்புன மூர்க்கன்ஸ் (தப்லிகி மாநாடு) பத்தி நீ எதுவுமே சொல்லலையே மூர்க்கா?...
Rate this:
Cancel
M.S.Ananth - coimbatore,இந்தியா
13-மே-202101:09:24 IST Report Abuse
M.S.Ananth இந்த செய்திக்கு கருத்து தெரிவித்தவர்கள் அனைவருமே நீதிமன்றத்தைத்தான் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார்கள். நீதித்துறைதான் இதை பார்த்து வெட்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை விட மோசமான நடத்தை இந்த நீதிமன்றங்களின் செயல்பாடும், கருத்துகளும். இனிமேலாவது திருத்திக்கொள்வார்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X