அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் திட்டவட்டம்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டமாக தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர்
Plus2Exam, Minister, AnbilMahesh, TN, பிளஸ்2, பொதுத்தேர்வு, பள்ளிக்கல்வி, அமைச்சர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டமாக தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. அதை எப்படி நடத்துவது என்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும்.


latest tamil news


கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தேர்வு குறித்து அறிவிக்கப்படும். கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வு நடத்தப்படும். ஒத்திவைக்கப்படுமே தவிர, ரத்து செய்யப்படாது. தேர்வு நடத்தப்படும் தேதியை முன்கூட்டியே தெரிவிக்க பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாணவர்களும், பெற்றோர்களும் பயப்பட வேண்டாம். தேர்வுக்கு தயாராவதற்கு ஏற்ற வகையில் முன்கூட்டியே தேர்வு தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
... - ,
12-மே-202120:02:39 IST Report Abuse
... எங்க உக்காந்து எழுதுரது...
Rate this:
Cancel
Mithun - Bengaluru,ஓமன்
12-மே-202119:09:58 IST Report Abuse
Mithun 2022 இல் நடக்க வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12-மே-202118:41:45 IST Report Abuse
sankaranarayanan இவரால் பல்லிதயத்தரம் முன்னேறும். பள்ளிப்படுப்பு விருத்தியாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X