பொது செய்தி

தமிழ்நாடு

'செவிலியர் தான் கடவுள்': கோவை இ.எஸ்.ஐ., டீன் கண்ணீர்

Updated : மே 13, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
கோவை : கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் நேற்று நடந்த செவிலியர் தின விழாவில், டீன் ரவீந்திரன், நர்ஸ்களின் கால்களில் விழுந்து வணங்கி, 'நீங்கள் தான் கடவுள்' என, கண்ணீர் மல்க தெரிவித்தார்.கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனை டீன் ரவீந்திரன் பங்கேற்று பேசுகையில், ''நாங்கள் வெறும் டாக்டர்கள்தான். மருந்து எழுதி
 நீங்கள் தான் கடவுள், செவிலியர்கள், டீன்,நெகிழ்ச்சி,கோவை இஎஸ்ஐ மருத்துவமனை,

கோவை : கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் நேற்று நடந்த செவிலியர் தின விழாவில், டீன் ரவீந்திரன், நர்ஸ்களின் கால்களில் விழுந்து வணங்கி, 'நீங்கள் தான் கடவுள்' என, கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனை டீன் ரவீந்திரன் பங்கேற்று பேசுகையில், ''நாங்கள் வெறும் டாக்டர்கள்தான். மருந்து எழுதி கொடுப்பதுடன் எங்கள் பணி முடிந்துவிடுகிறது. ஆனால், நோயாளிகளின் கூடவே இருந்து, அவர்கள் குணமடைந்து வீடு செல்லும் வரை பார்த்து கொள்வது நீங்கள்தான். அதிலும், கொரோனா காலத்தில் உங்கள் பணி மகத்தானது,'' என்று பேசிக் கொண்டிருந்தபோது, உணர்ச்சிவசப்பட்டு, நர்ஸ்களின் கால்களில் விழுந்து வணங்கினார்.


latest tamil news



தொடர்ந்து, கண்ணீர் மல்க, ''நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள்,'' என கூறினார். இதேபோல், கோவை அரசு மருத்துவமனையிலும், டீன் நிர்மலா தலைமையில், செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
12-மே-202119:55:33 IST Report Abuse
Nesan ஒருவருக்கு நன்றி செலுத்தும்பொழு இடம் சுத்தமாக இருக்கானு பார்க்க வாய்ப்பில்லை . அடி மனதிலிருந்து உளமார தனது நன்றியை சமர்ப்பித்து இருக்கார். மனிதர் பல்லாண்டு வாழ்க. " இதை மோடி சொன்ன பொழுது கேலி பேசினார்கள்" இந்த மோடி தான் காரோண காலத்தில் தன சுயநலத்துக்க நாடும் முழுவது தேர்தலை நடத்தி, கொரோன வளர்சிக்கு வித்திட்டுள்ளார்.
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
13-மே-202110:31:21 IST Report Abuse
தமிழ்வேள்மோடி நடத்தினார் என்றால் உங்களுக்கு சுய புத்தி எங்கே போனது ? தேர்தல் வேண்டாம் என்று சொல்வதுதானே? அன்னான் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று பதவிக்கு அலைந்தது யார் ? காணொளி மூலம் பிரச்சாரம் செய்துகொள்கிறோம் என்று ஏன் சொல்லவில்லை ? தேர்தல் வைக்கவில்லை என்றால் ஜனநாயக படுகொலை என்று கத்தும் வாயும் உங்களுடையது தானே ? தவறு முழுவதும் மாநில கடசிகளிடம் ........
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
12-மே-202119:21:13 IST Report Abuse
Bala வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
12-மே-202118:43:07 IST Report Abuse
krishnamurthy நானும் வணங்குகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X