பொது செய்தி

இந்தியா

2வது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? ஐசிஎம்ஆர் தலைவர் விளக்கம்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில், கொரோனாவின் 2வது அலையில் இளைஇஞர்கள் அதிகம் பேர் பாதிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்க்கவா கூறி உள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொரோனா 2வது அலையில், இளம் வயதினர் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதல் காரணம், இளம் வயதினர் வைரஸ் தொற்றுக்கு அதிகமாக வாய்ப்பளித்து வெளியில் அதிகமாக
கொரோனா, இளைஞர்கள், ஐசிஎம்ஆர், Covid-19, second wave,  young people, ICMR

புதுடில்லி : இந்தியாவில், கொரோனாவின் 2வது அலையில் இளைஇஞர்கள் அதிகம் பேர் பாதிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்க்கவா கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொரோனா 2வது அலையில், இளம் வயதினர் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதல் காரணம், இளம் வயதினர் வைரஸ் தொற்றுக்கு அதிகமாக வாய்ப்பளித்து வெளியில் அதிகமாக நடமாடுகிறார்கள். கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மீறும் போது பாதிக்கப்படுகிறார்கள்.


latest tamil news


இரண்டாவதாக நாட்டில் தற்போது உள்ள உருமாற்றமடைந்த கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பதால், பாதிப்பும் அதிகரிக்கிறது. இதனால் தான் இளைஞர்கள் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதேநேரம், வயதானவர்களும் அதிகளவு பாதிக்கப்படும் வாய்ப்பில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இரு கொரோனா அலைகளிலும் 70 சதவீதம் நோயாளிகள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். இளம் வயதினரை விட சற்று அதிகரித்து உள்ளது. இவ்வாறு பல்ராம் பார்க்கவா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
13-மே-202102:56:18 IST Report Abuse
Ketheesh Waran இந்த அர்த்தமில்லாத விளக்கத்தை பார்த்தபின் ஐசிஎம்ஆர்மீதான நம்பிக்கை இல்லாமல்போய்விட்டது
Rate this:
Cancel
Guru - Chennai,இந்தியா
12-மே-202120:16:05 IST Report Abuse
Guru ’கொரோனா என்றால் என்ன’ என்பதிலிருந்து இப்போது ’இளைஞர்களை ஏன் அதிகம் பாதிக்கிறது’ என்பது வரை எதுவுமே இவர்களுக்கு இன்று வரை அறிவியல் பூர்வமாகப் புரியவில்லை. ஏனெனில் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த உண்மையை நேரடியாக ஒப்புக்கொள்ள மன தைரியம் இல்லை. அவ்வளவு தான்.
Rate this:
Cancel
12-மே-202119:26:48 IST Report Abuse
ஆப்பு வயசு வித்தியாசம் பாக்காம தடுப்பூசி போட்டுக்க முன்வருவோர் எல்லோருக்கும் போட்டிருக்கலாம். முதியவர்கள் பலரும் போட்டுக்கொள்ள முன்வரவில்லை. ஆனா, தடுப்பூசி வீணாகுதுன்னு மாநில அரசுகளை குத்தம் சொல்றதிலேயே குறியா இருந்தாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X