பொது செய்தி

இந்தியா

தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை வசூல்: வருமான வரித்துறை மீண்டும் விளக்கம்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் பல லட்சம் ரூபாய்களை ரொக்கமாகப் பெற்று வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு, 'ரூ.2 லட்சம் வரையில் மட்டுமே ரொக்கமாக பெற அனுமதிக்கப்படுகிறது' என, வருமான வரித்துறை மீண்டும் விளக்கமளித்துள்ளது. மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க தொகையை ஏற்கக் கூடாது என்ற விதி உள்ளது.

புதுடில்லி: கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் பல லட்சம் ரூபாய்களை ரொக்கமாகப் பெற்று வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு, 'ரூ.2 லட்சம் வரையில் மட்டுமே ரொக்கமாக பெற அனுமதிக்கப்படுகிறது' என, வருமான வரித்துறை மீண்டும் விளக்கமளித்துள்ளது.latest tamil news


மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க தொகையை ஏற்கக் கூடாது என்ற விதி உள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் இச்சூழலில் தனியார் மருத்துவமனைகள் ரொக்கத் தொகை ஏற்பதில் புதிய சலுகையை மத்திய வருமான வரித்துறை தெரிவித்தது. புதிய உத்தரவின்படி நோயாளிக்குத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தில் ஒரே நாளில் நோயாளியின் உறவினர் ரூ.2 லட்சம் வரை ரொக்க பணம் அளித்தால் அதை ஏற்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


ஆனால், நோயாளிகளிடம் பல லட்சம் ரூபாய்களை ரொக்கமாகப் பெற்று, தனியார் மருத்துவமனைகள் வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்திய நிதி அமைச்சகத்துக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
இதையடுத்து, மருத்துவமனைகள் ரொக்கம் ஏற்பது குறித்து வருமான வரித் துறை மீண்டும் அளித்துள்ள விளக்கம்:


கொரோனா மருத்துவ சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கத் தொகையை ஆவனங்கள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ளலாம். அதற்கு நோயாளியின் ஆதார் அட்டை எண் அல்லது நிரந்தர கணக்கு எண் (பான்) விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நோயாளிக்கும் அவருக்குரிய மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை அளிக்கும் நபருக்குமான உறவை தெரிவிக்க வேண்டும். இந்த அறிவிக்கையின்படி சிகிச்சை தரும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், சிறிய மையங்கள் உள்ளிட்ட 19 மையங்கள், வருமான வரிப்பிரிவு சட்டத்தின் கீழ் (269எஸ்டி) வரி விலக்கு பெற முடியும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
13-மே-202109:18:44 IST Report Abuse
Paraman அதாவது தனியார் மருத்துவமனைகள் மக்களை நசுக்கி பிழிந்து உறிஞ்சுவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை ஆனால் இந்த நசுக்கும் வேலை, பிழியும் வேலை எல்லாம் எங்கள் சட்டப்படி வரிவசூலுக்கு மட்டும் தான்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-மே-202105:34:22 IST Report Abuse
Mani . V தனியார் மருத்துவமனைகள் பொது மக்களிடம் கொள்ளையடிப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவர்கள் வரி ஏய்ப்பது பற்றி மட்டுமே எங்களுக்கு கவலை.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
12-மே-202123:23:43 IST Report Abuse
PRAKASH.P People voted for 500 to 2500. Now sping for covid 25000 to 250000. Definitely politicians won't ask Pvt hospitals to reduce fees. They will try get commissions
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X