இந்தியாவின் நெருக்கடிக்கு தவறான கணிப்பே காரணம்: அமெரிக்க மருத்துவர் கருத்து

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
வாஷிங்டன்: 'இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டதாக நினைத்து, பொருளாதாரத்துக்கான கதவுகளை முன்கூட்டியே திறந்துவிட்டதுதான் இன்று கடுமையான நெருக்கடிக்கு இந்தியாவை தள்ளியிருக்கிறது' என, அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாஸி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலையில் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப்

வாஷிங்டன்: 'இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டதாக நினைத்து, பொருளாதாரத்துக்கான கதவுகளை முன்கூட்டியே திறந்துவிட்டதுதான் இன்று கடுமையான நெருக்கடிக்கு இந்தியாவை தள்ளியிருக்கிறது' என, அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாஸி தெரிவித்துள்ளார்.



latest tamil news


இந்தியாவில் கொரோனா 2வது அலையில் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பணியாளர்கள், ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள் என, அனைத்தும் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இந்தியாவின் நிலையைப் பார்த்து உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் மருத்துவம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய செனட் குழுவிடம், கொரோனா வைஸ் பரவல் குறித்து அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாஸி கூறியதாவது:


latest tamil news


இந்திய அரசின் தவறான கணிப்புதான், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடிக்குக் காரணம். கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டதாக நினைத்து, பொருளாதாரத்துக்கான கதவுகளைத் திறந்துவிட்டனர். இதனால் கொரோனா வைரஸ் 2வது அலையில் சிக்கி மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறார்கள்.
கொரோனாவிலிருந்து முழுமையாக ஒரு நாடு தப்பிக்க 70 முதல் 85 சதவீதம் தம் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதிகமான மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தாலே, கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவிடும். இது இந்தியா சாத்தியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்தோனி பாஸி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
12-மே-202123:20:18 IST Report Abuse
PRAKASH.P Instead of buying weapons from you.. we have to start buying vaccines...
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
12-மே-202122:51:45 IST Report Abuse
m.viswanathan ஆள்பவர்களுக்கும் ராசி வேண்டும் , தோசியாக இருக்க கூடாது
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-மே-202122:19:09 IST Report Abuse
தல புராணம் பைத்தியக்காரர்களிடம் பேசி வாங்கி கட்டிக்கொள்கிறார் இவர் பாவம். கோமியத்மை குடிக்க சொன்னா மடக் மடக்குன்னு குடிப்பாங்க. அவரே நாடு, பூரா சுடுகாடு தான், சாவட்டும்ன்னு விடுங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X