அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (87)
Share
Advertisement
சென்னை: தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசி இல்லாததால், தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோர தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே
CovidVaccine, Tender, TamilnaduCM, Stalin, முதல்வர், ஸ்டாலின், கொரோனா, தடுப்பூசி, டெண்டர், கொள்முதல்

சென்னை: தமிழகத்திற்கு போதிய அளவு தடுப்பூசி இல்லாததால், தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோர தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news


அதற்குான உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு, குறுதிய காலத்திற்குள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும். மேலும், தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும்போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனை உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று, முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னிலிருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது.

எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை உடனடியாக அமைத்திடவும், பிற மாநிலங்களில் உள்ள எக்கு உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து தமிழகத்திற்கு ரயில்கள் மூலமாக ஆக்சிஜனை கொண்டு வருவதற்கும், அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gnana sekaran - singapore,சிங்கப்பூர்
13-மே-202116:14:07 IST Report Abuse
gnana sekaran உலகளாவிய ஊழலுக்கு அடித்தளம் போட்டாச்சு
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
13-மே-202110:19:18 IST Report Abuse
skandh இதைத்தான் INVERTED PRIORITIES ன்னு சொல்லுவார்கள் . இங்கு காரோண பாதிக்க பட்டவர்களுக்கு மருத்துவமனையில் BED இல்லை . ரெமிடீஸிர்விற் குறைபாடு , OXYGEN தட்டுப்பாடு இருக்கு . AMBULANCE தட்டுப்பாடு . உயிர் இழந்தவர்களுக்கு தகனத்துக்கே மணிக்கணக்கில் காத்திருப்பு . இருப்பவனை முதலில் காக்க வழி பண்ணுங்க . வராததவனாவுக்கு இம்முனிட்டி பூஸ்டருக்கு முக்கியத்துவம் . சரி தான் .கபாசுர என்னாச்சு? எல்லா மந்திரிகளும் ஒன்று கோட்டையில் இருக்கிறார்கள் அல்லது ஆளையே காண வில்லை .சுகாதார மந்திரி மாசு எங்கே? கோடியை அசைத்து கொண்டிருந்தார்? அவரை காணவில்லையே. MLA பதவி AVASARA அவசரமாக எடுத்தாச்சு .இனி உங்களுக்கெல்லாம் சம்பளம் குறைவிருக்காது.இரெண்டு மந்திருக்கு CORONA அவர்களை காக்க வேண்டும் . பொறாததுக்கு தீமுகவினரின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது . பேரிடர் காலத்திலும் . இவர்களே வேண்டாம்னு சோன்ன. ஊரடங்கை செயல் படுத்தியாச்சு . ஒழுங்கா பண்ணுங்க இறக்குமதி அடுத்ததே . முதலில் கொரோனா பூச்சியை பிடித்து கிணற்றில் போடுங்க , பிறகுதடுப்பூசி . இப்போ இருப்பவர்களை காப்பாற்றுங்க . மீதம் பிறகு பார்க்கலாம் . அதுக்கு முன்னே சீப்பான COVAXIN, COVISHIELD உற்பத்தி அஃகும் . கேட்ட்டால் சரி இல்லாவிட்டால் , நீங்களும் மக்களும் அனுபவிக்கணும்னு இருந்தால் யாரும் தடுக்க முடியாது , போங்க .
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
13-மே-202109:55:01 IST Report Abuse
sankar எங்க- அண்டார்டிகாவுக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X