தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: டில்லி துணை முதல்வர்

Added : மே 12, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி கோரியிருந்த தடுப்பூசி மருந்துகளை இரு நிறுவனங்களும் தர இயலாது என கூறிவிட்டதாக தெரிவித்துள்ள டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய அரசு தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு அதிகாரிகள் தலையீட்டால் டில்லி கோரிய தடுப்பூசி மருந்துகள்
CovidVaccine, Export, Delhi, DeputyCM, Sisodia, டில்லி, கொரோனா, தடுப்பூசி, மத்திய அரசு, ஏற்றுமதி, துணை முதல்வர், சிசோடியா

புதுடில்லி: டில்லி கோரியிருந்த தடுப்பூசி மருந்துகளை இரு நிறுவனங்களும் தர இயலாது என கூறிவிட்டதாக தெரிவித்துள்ள டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய அரசு தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு அதிகாரிகள் தலையீட்டால் டில்லி கோரிய தடுப்பூசி மருந்துகள் கிடைக்கவில்லை. தலா 67 லட்சம் டோஸ் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 2 நிறுவனங்களிடம் டில்லி அரசு கேட்டிருந்தது. ஆனால், டில்லி மாநில அரசு கோரிய தடுப்பூசி மருந்துகளை தர இயலாது என இரு நிறுவனங்களும் கூறிவிட்டன. மத்திய அரசின் அதிகாரிகள் உத்தரவுப்படியே, மாநிலங்களுக்கு தடுப்பூசி மருந்து அனுப்பப்படுவதாக நிறுவனங்கள் கூறுகின்றன.


latest tamil news


கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இந்திய நாட்டின் அரசுபோல் மத்திய அரசு செயல்பட வேண்டும். மத்திய அரசுதான் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். டில்லி மாநில அரசிடம் இருப்பு உள்ள தடுப்பூசி மருந்துகள் தீர்ந்து விட்டன. கோவிஷீல்டு தடுப்பூசி போடும் மையங்கள் மட்டும் செயல்படுகின்றன; கோவாக்சின் மையங்கள் மூடப்பட்டுவிட்டன. தடுப்பூசி தட்டுப்பாட்டால் 17 பள்ளிகளில் செயல்பட்டு வந்த 100 மையங்கள் மூடப்பட்டுவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hariharan - coimbatore,இந்தியா
13-மே-202110:00:13 IST Report Abuse
hariharan Covid shield is an foreign products manufactured in India. we have very least control. covaxin is indian product we need to improve capacity. every one knows increasing capacity on production on even samosa is time and money based. this is medicine and lots of regulations which cannot be bye passed for urgency. This people are also educated and no need say all this. just to redirect the heat from public they point the fingers to CG.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
13-மே-202108:14:59 IST Report Abuse
Sampath Kumar என்ன அவரு தப்ப சொல்லிட்டாரு ?
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
13-மே-202108:04:23 IST Report Abuse
S Bala நாம் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்த காலம் நமது மக்கள் பயன்படுத்தாமல் இருந்த காலம். மேலும் தடுப்பூசிகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. நாம் தடுப்பொசிகளை அனுப்பியதால் தான் இன்று உதவிக்கு அனைத்து நாடுகளும் வருகின்றன. சாவுகளில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இந்த ஆம் ஆத்மி கட்சியினர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X