பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைகிறது

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 37,04,099 ஆக குறைந்து உள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 15.97
கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, சிகிச்சை, மத்திய சுகாதாரத்துறை, COVID-19, India, active, caseload, decline,  Health Ministry

புதுடில்லி: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 37,04,099 ஆக குறைந்து உள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 15.97 சதவீதமாகும்.

நேற்றைய தினத்தை விட இன்று சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11,122 குறைந்து உள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக, இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது.கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,93,82,642 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில், குணமடைந்தவர்களின் சதவீதம் 83.04 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,55,338 பேர் குணமடைந்து உள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக, கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா, கேரளா, உ.பி., கர்நாடகா, தமிழகம், மே.வங்கம், ஹரியானா, குஜராத், ஆந்திரா மற்றும் பீஹாரை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 71.58 சதவீதம் ஆகும்.


latest tamil news



9,200 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 5,243 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள், 5,913 வெண்டிலேட்டர்கள், 3.44 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள், சர்வதேச நாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெற்று அவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, சுங்கத்துறையில் இருந்து வேகமாக அனுமதி கிடைக்கப்பெற்று வான் மற்றும் சாலை வழியாக பிரித்து கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து உள்ளது.

இன்று காலை 7:00 மணி நிலவரப்படி 17,52,35,991 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 95,82,449 சுகாதார பணியாளர்கள் முதல் டோசையும், 65,39,376 சுகாதார பணியாளர்கள் இரண்டாவது டோசையும் எடுத்து கொண்டு உள்ளனர். முன்கள பணியாளர்களில் 1,41,49,634 பேர் முதல் டோசையும், 5,58,83,416 பேர் இரண்டாவது டோசையும் எடுத்து கொண்டுள்ளனர். 18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 30,44,463 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் . 45வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில், 5,58,83,416 பேர் முதல் டோசையும், 78,36,168 பேர் இரண்டாவது டோசையும் செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 5,39,59,772 பேர் முதல் டோசையும், 1,62,88,176 பேர் இரண்டாவது டோசையும் செலுத்தி உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில், 24.4 லட்சம் டோஸ் தடுப்பு மருந்தும், 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்களில் 4,79,282 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டதில், ஆந்திரா, கேரளா, பீஹார், ம.பி, கர்நாடகா, மே.வங்கம், உ.பி., குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 66.67 சதவீதம் பேர் அடங்குவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மே-202121:12:35 IST Report Abuse
ஆப்பு நிறைய பேர் போய்ச் சேந்திருப்பாங்க. அதான் குறைகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X