பொது செய்தி

இந்தியா

கொரோனா 2ம் அலை ஜூலையில் தான் குறையும்: ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: 'இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைவதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம்' என, நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல் தெரிவித்துள்ளார்.கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு எப்போது குறையும் என்பது குறித்து அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர், நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல் கூறியதாவது:இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் தான் இரண்டாம் அலை

புதுடில்லி: 'இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைவதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம்' என, நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு எப்போது குறையும் என்பது குறித்து அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர், நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல் கூறியதாவது:



latest tamil news


இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் தான் இரண்டாம் அலை பரவுகிறது. ஆனால், உருமாறிய கொரோனா அதிக ஆபத்தானது எனக் கூற முடியாது. கொரோனா பாதிப்பு குறைவதாக தற்போதைய வரைபடம் காட்டுகிறது. ஆனால், முழுவதுமாகக் குறைவது அவ்வளவு எளிதல்ல. கொரோனா முதல் அலை பாதிப்பில் நிலையான சரிவு இருந்தது. அதாவது படிப்படியாக குறைந்தது. மேலும் அது 90,000 - 95,000 என்ற குறைவான பாதிப்பில் தொடங்கியது. ஆனால், இரண்டாம் அலையின் உச்சம் 4 லட்சம் எனத் தொடங்கியுள்ளது. எனவே, இரண்டாம் அலை பாதிப்பு எதிர்பார்ப்பதைவிட மெதுவாகவே குறையும். அதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம்.


latest tamil news




கொரோனா முதல் அலையால் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது. அதனால் இரண்டாம் அலையை எதிர்கொள்ள முடியும் என, மக்கள் கருதுகின்றனர். ஆனால், அது தவறு. எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது எனக் கூறியவர்களில் 75 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா வந்தால் உயிரிழப்பு ஏற்படுவது மிகமிகக் குறைவு.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-மே-202112:37:44 IST Report Abuse
Sridhar இந்த 'நிபுணர்கள்' என்று அழைக்கப்படும் நபர்கள் சொல்லி ஏதாவது இதுவரை சரியாக நடந்திருக்கிறதா? சென்றவருடம் ஜூலை மாத அளவில் இந்தியாவில் 10 கோடி பேர் இறப்பார்கள் என்று இதே 'நிபுணர்கள்' ஆரூடம் கூறினார்கள். நம் அரசும் மக்களும் அதை பொய்யாக்கினார்கள். இவர்களுக்கெல்லாம் தலை அந்த WHO அவர்கள் ஒவ்வொரு சொல்லுமே அபத்த களஞ்சியம். முதலில் இந்த நோயை உலகளாவிய தொற்று என்று அறிவிப்பதிலேயே இவர்களுக்கு குழப்பம். அப்புறம், மனிதனிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது என்றுவேறு. மாஸ்க் அணியுங்கள்.. இல்லை இல்லை அணியவேண்டாம் .. சற்று பொறுங்கள், அணியவேண்டும்.. ஹ்ம்ம்.. அணிந்தால் நல்லது பொருட்களின் மூலம் பரவாது, ஆகவே, எல்லா இடங்களுக்கும் கிருமிநாசினி அடிக்க தேவையில்லை.... எப்படி எவ்வளவோ தடுமாற்றங்கள். இவர்களெல்லாம் படித்தவர்களா இல்லை காசுக்கு மாரடிக்கிறவர்களா எனும் சந்தேகம் வலுவாக வருகிறது. சீனாவிலிருந்து வந்த வைரஸை அவ்வாறு கூற தயங்கிய இவர்கள் இப்போது பி1617 உருமாறிய கிருமியை இந்திய தொற்று என்று சொல்லும் தைரியசாலிகள் ஹ்ம்ம். இவர்களிடம் மாட்டிக்கொண்ட சமுதாயம் எங்கே போயி முட்டிக்கொள்வது
Rate this:
Cancel
Jayaraman Ramaswamy - Chennai,இந்தியா
13-மே-202111:18:21 IST Report Abuse
Jayaraman Ramaswamy எங்கே கிடைக்குது வாக்சின்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-மே-202105:31:05 IST Report Abuse
Mani . V அதற்கு இடையில் இந்தியாவின் ஜனத்தொகையே குறைந்து விடும் - திறமையற்ற ஆட்சியாளர்களின் புண்ணியத்தில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X