பொது செய்தி

இந்தியா

கொரோனா பரிசோதனை செய்வதில் இந்தியா உலக சாதனை!

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று பரிசோதனை. ஏப்., 30 அன்று ஒரே நாளில் இதுவரை எந்த நாடுகளும் செய்யாத அளவு 19.45 லட்சம் மக்களுக்கு இந்தியா பரிசோதனை நடத்தியுள்ளது.கொரோனா 2-ம் அலை அதிகம் பரவி வருகிறது. அதன் பாதிப்புகளும் இளைஞர்கள், முதியவர்கள் என்ற வேறுபாடின்றி உள்ளது. சமீபமாக தொற்று பாதிப்பின் எண்ணிக்கையில் குறைவு காணப்படுகிறது.
India, COVID tests, world, ICMR DG

புதுடில்லி: கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று பரிசோதனை. ஏப்., 30 அன்று ஒரே நாளில் இதுவரை எந்த நாடுகளும் செய்யாத அளவு 19.45 லட்சம் மக்களுக்கு இந்தியா பரிசோதனை நடத்தியுள்ளது.

கொரோனா 2-ம் அலை அதிகம் பரவி வருகிறது. அதன் பாதிப்புகளும் இளைஞர்கள், முதியவர்கள் என்ற வேறுபாடின்றி உள்ளது. சமீபமாக தொற்று பாதிப்பின் எண்ணிக்கையில் குறைவு காணப்படுகிறது. இருப்பினும் அரசு தகவலின் படி, மொத்தம் 734 மாவட்டங்களில் 310 மாவட்டங்களில் பாசிடிவ் விகிதம் 20 சதவீதத்துக்கு மேலாக உள்ளது. அதாவது நூறு பேர்களிடம் பரிசோதனை நடத்தினால் 20 பேர்களுக்கு தொற்று இருக்கும்.


latest tamil news



இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறியதாவது: ஏப்., 30 அன்று 19,45,299 பரிசோதனைகள் இந்தியாவில் நடத்தப்பட்டன. இது உலகில் அமெரிக்கா உட்பட எந்த நாடுகளும் இதுவரை செய்யாத பரிசோதனைகள். மே 5 அன்று 19.2 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நாளொன்றுக்கு 18 முதல் 20 லட்சம் பரிசோதனைகள் நடக்கின்றன. ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் குறையும்.

முதல் அலை மற்றும் இந்த இரண்டாம் அலையின் போதும் பரிசோதனைக்கான உள்கட்டமைப்பினை அதிகப்படுத்தியிருக்கிறோம். ஆய்வக எண்ணிக்கையும் கூடியுள்ளது. 2,520 கொரோனா பரிசோதனை மையங்கள் நம்மிடம் உள்ளன. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள், இதர நவீன கருவிகளும் நாடு முழுவதும் உள்ளன. முதல் 10 கோடி பரிசோதனை கடந்த ஆண்டு ஜூலை 7-ல் நடந்தது. பிப்., மாதம் 20 கோடி பரிசோதனைகளும், மே 7-ல் 30 கோடி பரிசோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
13-மே-202111:44:47 IST Report Abuse
Vena Suna பரிசோதனைங்கற பேருல கூட்டத்தை கூட்டி கொரோனா அதிகமாகி விட்டது ...ஒன்னும் ஒன்னும் ரெண்டு ..உன் மேல் ஆசை உண்டு கொரோனாவிற்கு
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-மே-202110:08:35 IST Report Abuse
Malick Raja முதலில் பெருமையை விட்டு விட்டு ஆக்கவேண்டியதை செய்யுங்கள் . பெருமை பேசி பயனில்லை.. நாட்டிலே கட்டுப்பாடற்று கோரோனோ பரவுகிறது அதை பற்றி பேசாமல் இந்திய உலகசாதனையை பேசுவதில் பயனில்லை
Rate this:
Cancel
13-மே-202108:56:04 IST Report Abuse
இவன் கருத்து போடுகிறவர்கள், PM அ குறை சொல்லாம ரோடுல லாக் டவுன் ல ஊர் சுத்துறவன், mask போடாம போறவன், கூட்டம் கூடுறவன போய் கேளுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X