புதிய பார்லி. கட்டடம்: மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து 'இந்தியா கேட்' வரையிலான பகுதிகளை மறுசீரமைக்க 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் புதிய பார்லி மென்ட் கட்டட கட்டுமான பணிகள்
புதிய பார்லி. கட்டடம்: மோடி,எதிர்க்கட்சிகள்  கடிதம்

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து 'இந்தியா கேட்' வரையிலான பகுதிகளை மறுசீரமைக்க 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் புதிய பார்லி மென்ட் கட்டட கட்டுமான பணிகள் நடக்கிறது. நாட்டில் தற்போது 'கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியுள்ள நிலையில் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டு, மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



.
இந்நிலையில் இன்று பிரதான எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். கடித்தில் சோனியா, தேவகவுடா, உத்தவ் தாக்கரே, சரத்பவார், ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால்,ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். கட்டுமான பணிக்கு செலவிடும் நிதியை ஆக்ஸிஜன், தடுப்பூசி வாங்கிட பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும் இலவச தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
13-மே-202108:53:10 IST Report Abuse
suresh kumar யானை சிலைகள் மிகவும் அவசியமான ஒன்று. அவைகள் அரசு செலவில் வைக்கப்படாவிட்டால் நாட்டில் மக்கள் நோய் வந்து அவதி படுவார்கள். அந்த காலத்தில் மருத்துவ மனைகள் ஏராளமாக இருந்தன.
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
13-மே-202108:48:31 IST Report Abuse
suresh kumar அடுத்த தேர்தலில் ஜெயித்து நீங்கள் பிரதமராக வந்து இங்கேதான் (செண்ட்ரல் விஸ்டா) இருக்கப் போகிறீர்கள். ஓ நீங்கள் வந்து நடைமுறை படுத்தினால் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறதே ('புகழை'த்தான் சொல்கிறேன்) என்ற கவலையா?
Rate this:
Cancel
a. Sathiamurthy - chennai,இந்தியா
13-மே-202100:26:13 IST Report Abuse
a. Sathiamurthy 1000 கணக்கான கட்டிடம் கட்டும் பணியாளர்கள் அழைக்கின்றனர். கட்டிடம் கட்டும் பணி நிறுத்தக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X