பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 12, 2021
Share
'இப்படித் தானே நம் ஜனநாயகத்தில், காலம் காலமாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் அனைத்திற்கும் நேரு, இந்திரா, ராஜிவ் பெயர்கள். மாநிலங்களில் முதல்வர்கள் பெயர்கள். அந்த வகையில் நம்ம ஊரில் இதெல்லாம் சகஜமுங்க...' என, சொல்லத் துாண்டும் வகையில், காங்., ராஜ்யசபா எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை: என் இளைய மகன் லண்டனில் படித்து வருகிறார். சமீபத்தில் அவர் தன் முதலாவது கொரோனா

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இப்படித் தானே நம் ஜனநாயகத்தில், காலம் காலமாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் அனைத்திற்கும் நேரு, இந்திரா, ராஜிவ் பெயர்கள். மாநிலங்களில் முதல்வர்கள் பெயர்கள். அந்த வகையில் நம்ம ஊரில் இதெல்லாம் சகஜமுங்க...' என, சொல்லத் துாண்டும் வகையில், காங்., ராஜ்யசபா எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை: என் இளைய மகன் லண்டனில் படித்து வருகிறார். சமீபத்தில் அவர் தன் முதலாவது கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அதற்கான சான்றிதழில், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் படம் இல்லை. ஆனால் நம் நாட்டில், தாடி வைத்த ஒரு நபரின் படம் உள்ளது.

'அவர் மன்னிப்பு கேட்டதும், கொரோனா குறைந்துவிடப் போகிறதா; உங்களின் ஐதராபாத் தொகுதியில் கொரோனா கொட்டம் போடுகிறது; காரணம் நீங்கள் தானா...' என, காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி பேட்டி: கொரோனா 2-வது அலை வரப்போகிறது என்று நம் விஞ்ஞானிகளே எச்சரித்தும், மத்திய அரசு துாங்கி விட்டது; தோல்வி அடைந்து விட்டது. மோடி அரசு தன் தவறை ஒப்புக் கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.


'ஒரு மாதம், 'டாஸ்மாக்' கடைகளை அடைக்கப் போகிறோம் என்றால், 1,000 கோடி ரூபாயை தாண்டியிருக்கும் விற்பனை...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தில் மது விற்பனை சனிக்கிழமை 426 கோடி ரூபாய்; ஞாயிற்றுக்கிழமை, 429 கோடி ரூபாய். சனிக்கிழமையை ஞாயிற்றுக்கிழமை வென்றுவிட்டது.


'நோய் தாக்கம், பரவல் போன்றவற்றின் அடிப்படையில் தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது. அதிலும் அரசியல் செய்ய, பிரதமர் மோடி, தமிழக அரசியல்வாதியில்லை...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
ஒரு கண்ணில் வெண்ணெய்; மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு. இது தான் மத்திய அரசின் கூட்டாட்சி தர்மம். ஒரே மக்கள் தொகை உள்ள மாநிலங்களுக்கு, வெவ்வேறு அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை ஒதுக்கீடு செய்வது எப்படி? தமிழகத்தின் மக்கள் தொகையைவிட குறைவாக இருக்கும் குஜராத்துக்கு, இரண்டு மடங்கு அதிகம் எப்படி?


'கேள்வி கேட்பது எளிது. செயல்படுத்துவது மிக கடினம் என்பதை, உங்களின் கூட்டணி கட்சி தலைவரான ஸ்டாலின் மற்றும் தி.மு.க.,வினர் உணர்ந்திருப்பரே; அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை:
அமெரிக்காவில் 40 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு விட்டனர். முழுக்க முழுக்க இலவசம். 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்'களில் கூட இலவசமாக போடுகின்றனர். அமெரிக்காவை உதாரணமாக கொள்ளும் மோடி அரசு, இந்த விஷயத்தில் அதை ஏன் பின்பற்றவில்லை?

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X