மேற்குவங்கத்தில் இரண்டு பா.ஜ. எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். நடந்து முடிந்த, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., 213 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வராக, கடந்த 5-ம் தேதி மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். 77 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.., எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. இந்நிலையில் புதிதாக சட்டசபைக்கு
மேற்குவங்கம் இரண்டு பா.ஜ. எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

நடந்து முடிந்த, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., 213 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வராக, கடந்த 5-ம் தேதி மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். 77 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.., எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.

இந்நிலையில் புதிதாக சட்டசபைக்கு தேந்தெடுக்கப்பட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் ஜெகந்நாத் சர்க்கார், நிதிஷ்பரமானிக் ஆகிய இருவரும் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.


latest tamil news



இவர்கள் ஏற்கனவே பார்லி. எம்.பி.க்களாக பதவி வகித்து வருகின்றனர். மாநிலத்தில் பா.ஜ. பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். எனினும் பா.ஜ. பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியும் என்பதால் எம்.பி. பதவியை தக்க வைக்க வேண்டி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பீமன் பானர்ஜியிடம் வழங்கினர். இதனால் சட்டசபையில் பா.ஜ., வின் பலம் 77 லிருந்து 75 ஆக குறைந்துள்ளது. இரு தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
19-மே-202118:34:21 IST Report Abuse
Ray தேர்தல் ஆணையம் அங்கு தேர்தல் அறிவிக்காமல் ஐந்து ஆண்டுகளை கடத்தினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை
Rate this:
Cancel
13-மே-202114:59:49 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) இனி தேர்தலில் நிட்பவர்கள் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு நிற்கவேண்டும் கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட கூடாது.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
13-மே-202112:30:32 IST Report Abuse
Kalyan Singapore தேர்தல் சீர் திருத்தத்தில் தோற்றவர்கள் பதவி ஏற்று 6 மாதத்திற்குள் மீண்டும் போட்டியிட்டு ஜெயிப்பதையும் நிறுத்த வேண்டும். மம்தாவுக்கு போட்டியிட இப்போதே தொகுதிகள் கிடைத்து விட்டன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X