கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ., விளக்கம்

Updated : மே 14, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: 'லைசென்ஸ் ஒப்பந்தம் மற்றும் வர்த்தக ரீதியிலான பொறுப்புகளின் படியே, கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள்விபரம் தெரியாமல் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன' என, பா.ஜ., விளக்கம் அளித்து உள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனம் தயாரிக்கும், 'கோவிஷீல்டு' மற்றும் தெலுங்கானா மாநிலம்
Corona Vaccine, export, Vaccine, கொரோனா, தடுப்பூசி, ஏற்றுமதி, எதிர்க்கட்சிகள், பாஜ, விளக்கம்

புதுடில்லி: 'லைசென்ஸ் ஒப்பந்தம் மற்றும் வர்த்தக ரீதியிலான பொறுப்புகளின் படியே, கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள்விபரம் தெரியாமல் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன' என, பா.ஜ., விளக்கம் அளித்து உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனம் தயாரிக்கும், 'கோவிஷீல்டு' மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும், 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பூசிகள், தற்போது பயன்பாட்டில் உள்ளன.


ஒப்பந்தம்


நம் நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக, காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் சாம்பித் பத்ரா கூறியுள்ளதாவது:இதுவரை வெளிநாடுகளுக்கு 6.63 கோடி, 'டோஸ்' தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. அதில் 84 சதவீதம், வர்த்தக மற்றும் லைசென்ஸ் ஒப்பந்தங்களில் நமக்குள்ள பொறுப்புகளின் அடிப்படையில் ஆனவை.

இரண்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும், தங்களுடைய ஒப்பந்த பிரிவுகளின்படி, வெளிநாடுகளுக்கு 5.50 கோடி, 'டோஸ்' மருந்தை அனுப்பியுள்ளன.இதைத் தவிர, 1.07 கோடி, 'டோஸ்' மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் உதவியாக அனுப்பப்பட்டுள்ளது. அதில் 78.5 லட்சம், 'டோஸ்' நம் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அண்டை நாடுகளில் பரவல் குறைந்தால், அது நம் நாட்டுக்கும் பலனளிக்கும்.

ஐ.நா., அமைதிப் படையில் 6,600 இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். நல்லெண்ணத்தில், அந்த படைக்கு, இரண்டு லட்சம், 'டோஸ்' தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது.ஆனால், நம் நாட்டு மக்களுக்கு அளிக்காமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக, பொய் தகவல்களை காங்கிரஸ் ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

'இந்த இரண்டு நிறுவனங்கள், தடுப்பூசி தொழில்நுட்பத்தை வேறு இந்திய நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்' என, கெஜ்ரிவால் கூறியுள்ளார். சீரம் இந்தியா, உற்பத்தி செய்வதற்கான துணை ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. அதனால் தொழில்நுட்பத்தை வழங்க முடியாது.


நடைமுறைகள்


பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்காக மற்ற நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். இதில் பல நடைமுறைகள் உள்ளன.பொய் செய்திகள் பரப்புவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். உலகளாவிய உறவில், நாம் தனித் தீவாக இருக்க முடியாது. மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
13-மே-202117:29:46 IST Report Abuse
Murthy கோவாக்ஸின் கண்டுபிடிப்பில் ICMR ன் பங்கு என்ன என்பதை தெளிப்படுத்தாமல் தனியாருக்கு அரசு துணைபோவதால் தான் இந்த தட்டுப்பாடு. கோவாக்ஸின் தயாரிப்பை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கலாம்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
13-மே-202121:23:55 IST Report Abuse
தல புராணம்உண்டியலுக்கு வருமானம் வருமா ?...
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-மே-202116:56:37 IST Report Abuse
r.sundaram இந்தியாவை பொறுத்த அளவில் எதிர்க்கட்சிகளுக்கு தானாகவும் எதுவும் தெரியாது, சொன்னாலும் புரியாது என்ற நிலைதான்.. இந்த மாதிரி அகில உலக அளவில் நோய் தொற்று இருக்கும் போது அரசுடன் ஒத்துழைப்பது அவசியம் என்பது கூட அவர்களுக்கு தெரிய வில்லை.
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
13-மே-202116:01:17 IST Report Abuse
C.SRIRAM எங்கே குஜிரிவாலின் உளறல் இன்று ?. எப்படித்தான் "I.I,T" யில் படித்தாரோ (அப்போது நுழைவுத்தேர்வு இல்லை போலும் )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X