பொது செய்தி

இந்தியா

'இந்திய வகை கொரோனா' என்பதற்கு மத்திய அரசு எதிர்ப்பு

Updated : மே 14, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி :'தற்போது நம் நாட்டில் பரவி வரும், 'பி.1.617' வகை உருமாறிய கொரோனா வைரசை, 'இந்திய வகை' என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடவில்லை. எந்த அடிப்படையும், ஆதாரமும் இல்லாமல், ஊடகங்கள் அவ்வாறு குறிப்பிடுகின்றன' என, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நம் நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த 2019 இறுதியில், நம் அண்டை நாடான சீனாவில்
'இந்திய வகை கொரோனா' ,எதிர்ப்பு,  ஊடகங்கள்,கண்டனம்

புதுடில்லி :'தற்போது நம் நாட்டில் பரவி வரும், 'பி.1.617' வகை உருமாறிய கொரோனா வைரசை, 'இந்திய வகை' என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடவில்லை. எந்த அடிப்படையும், ஆதாரமும் இல்லாமல், ஊடகங்கள் அவ்வாறு குறிப்பிடுகின்றன' என, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த 2019 இறுதியில், நம் அண்டை நாடான சீனாவில் முதலில் தென்பட துவங்கிய கொரோனா வைரஸ், பல முறை உருமாற்றம் அடைந்துள்ளது.

எந்த நாட்டில் முதல்முறையாக அந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தென்பட்டதோ, அதற்கு அந்த நாட்டின் பெயரையும் சேர்த்து, ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.இந்நிலையில் நம் நாட்டில், கடந்தாண்டு அக்டோபரில், புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் தென்பட்டது. இதை, பி.1.617 என்று அழைக்கின்றனர்.இதற்கிடையே பிரேசில், பிரிட்டன், தென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக தென்பட்ட உருமாறிய கொரோனா வகைகளை, கவலைஅளிக்கும் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.


பட்டியல்



இந்நிலையில், நம் நாட்டில் முதல்முறையாக தென்பட்ட பி.1.617 வகை உருமாறிய கொரோனாவையும், கவலையளிக்கும் பட்டியலில் சேர்ப்பதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அனைத்து ஊடகங்களும், இந்த வகை உருமாறிய கொரோனாவை, இந்திய வகை கொரோனா என்று குறிப்பிட்டுள்ளன. இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.


குறிப்பிடப்படவில்லை



இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது நாட்டில் பரவிவரும் பி.1.617 வகை கொரோனாவை, இந்திய வகை கொரோனா என்று ஊடகங்கள் மற்றும் பலர் குறிப்பிடுகின்றனர். இது அடிப்படை ஆதாரமற்றது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் எந்த இடத்திலும், இது இந்திய வகை கொரோனா என்று குறிப்பிடப்படவில்லை. உண்மையில் அந்த அறிக்கையில், எந்த இடத்திலும் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.அதனால், இனி இந்த வகை உருமாறிய கொரோனாவை, இந்திய வகை என்று குறிப்பிட வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சுகாதார அமைப்பு விளக்கம்



மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வகைகளை, அவை முதலில் எந்த நாட்டில் தென்பட்டதோ, அந்த நாட்டின் பெயரில் அழைப்பதில்லை.அவை, அறிவியல் ரீதியில் குறீயீடுகளாலேயே அழைக்கப்படுகின்றன. இதையே அனைவரும் பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


44 நாடுகளில் தென்பட்டுள்ளது



உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:'சார்ஸ்கோவ் - 2' எனப்படும் கொரோனா வைரஸ் அடைந்து வரும் உருமாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், அவை எங்கெங்கு பரவி வருகிறது, அதன் வீரியம் எப்படி உள்ளது என்பதையும் கவனித்து வருகிறோம்.அந்த வகையில் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வைரஸ், 44 நாடுகளில் தென்பட்டு உள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆறு மண்டலங்களிலும் இந்த வகை வைரஸ் காணப்படுகிறது. அதன் தீவிரம் அதிகமாக உள்ளது. அதையடுத்து, கவலையளிக்கும் பட்டியலில் இந்த உருமாறிய வைரசை சேர்த்துள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Believe in one and only God - chennai,இந்தியா
13-மே-202115:22:47 IST Report Abuse
Believe in one and only God ஒரு டாக்டர் கூற்றுப்படி இந்தியாவில் உருமாறிய கரோநா வைரஸ் வித்தியாசமானது. எப்படி எனில் எந்த symptom- மும் இருக்காது. ஆனல் ஆக்சிஜன் அளவு உடம்பில் குறையும். இது உயிருக்கு ஆபத்து.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-மே-202112:44:02 IST Report Abuse
Sridhar இதில் வேடிக்கை என்னவென்றால், நம் உள்ளூர் தேசவிரோதிகளுக்கு இந்த உருமாறிய வைரஸை இந்திய வைரஸ் என்றுதான் அழைக்கவேண்டுமாம் அதை எதிர்த்து மத்திய அரசு குரல் கொடுப்பதை கிண்டலடிக்கும் ஊடகங்கள், தங்கள் உண்மை நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன. ஆகவே, மோடி எதிர்ப்பு என்பது இந்திய எதிர்ப்பாகிவிட்டது. அதனால், மோடியே இந்தியா, இந்தியாவே மோடி தான் என்றும் மறைமுகமாக ஊர்ஜிதப்படுத்துகிறார்களோ?
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
13-மே-202111:52:57 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு டிரம்ப் "சீன வைரஸ்" என்று குறிப்பிட்ட பொழுது சீனா எதிர்த்தது அதுவே நியாயம் என்றால், இன்று நாம் எதிர்ப்பு காட்டுவதும் சரியே நாமா தயாரித்து அனுப்பினோம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X