கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

Updated : மே 14, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (28+ 25)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, எட்டு முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு, பிரதமர், நரேந்திர மோடிக்கு, 12 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதை தடுப்பதற்காக, எட்டு முக்கிய இலக்குகளை குறிப்பிட்டு, காங்கிரஸ் உள்ளிட்ட, 12 முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒரு கடிதத்தை, பிரதமருக்கு
கொரோனா,கட்டுப்படுத்த பிரதமர், எதிர்க்கட்சிகள், கடிதம்

புதுடில்லி :கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, எட்டு முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு, பிரதமர், நரேந்திர மோடிக்கு, 12 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதை தடுப்பதற்காக, எட்டு முக்கிய இலக்குகளை குறிப்பிட்டு, காங்கிரஸ் உள்ளிட்ட, 12 முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒரு கடிதத்தை, பிரதமருக்கு அனுப்பியுள்ளன. கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக, நாங்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் பல ஆலோசனைகளை, அறிவுரைகளை வழங்கியுள்ளோம். ஆனால், அவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது அல்லது ஏற்க மறுக்கிறது. அதனால்தான், தற்போது பிரச்னை தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், எட்டு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் மட்டுமே, நிலைமை சீரடையும். அவை:
* சர்வதேச மற்றும் உள்ளூரில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தடுப்பூசிகளை, மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும். நாடு முழுதும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும்

* உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க லைசென்ஸ் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும்

* பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட, 35 ஆயிரம் கோடி ரூபாயை, தடுப்பூசிக்காக பயன்படுத்த வேண்டும்

* புதிய பார்லிமென்ட் கட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்து, அந்தத் தொகையை, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிக்கு பயன்படுத்த வேண்டும்
* 'பிஎம்கேர்ஸ்' நிதியில் உள்ள இதுவரை கணக்கு காட்டப்படாத தொகையை முழுமையாக பயன்படுத்தி, தடுப்பூசி, ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும்

* வேலையில்லாதோருக்கு, மாதம், 6,000 ரூபாய் வழங்க வேண்டும்

* தேவைப்படும் அனைவருக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்

* போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், விவசாய சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
14-மே-202107:27:42 IST Report Abuse
Darmavan சந்தில் சமாராதனையாக கொரனவை காரணம் கட்டி தன சொந்த பழியை தீர்த்து கொள்கிறார்கள். PM கேர் விவசாயிகள் விவகாரங்களை சேர்த்துக்கொள்கிறார்கள்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
13-மே-202123:13:09 IST Report Abuse
Mohan ஒண்ணு கூடிட்டாங்கையா ஒண்ணு கூடிட்டாங்கையா , எதிர்கட்சி எல்லாம் ஒண்ணு கூடிட்டாங்கையா .
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
13-மே-202123:09:38 IST Report Abuse
Mohan அவ்ளோ பெரிய வூடு கட்டி 365 நாளும் வூட்டுக்குள்ளேவா குந்திகினு இருக்கபோறாரு மண்ணு மாதிரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X