பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 2 ஆண்டுகள் சம்பளம்!

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மா, கொரோனாவால் உயிரிழந்த தங்களின் ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 2 ஆண்டுகள் சம்பள தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இளம் வயதினர், குடும்பத்தில் சம்பளம் ஈட்டக்கூடிய முதன்மை நபர்கள் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அது போன்றவர்களின் திடீர் மறைவால் அவர்களது குடும்பம்

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மா, கொரோனாவால் உயிரிழந்த தங்களின் ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 2 ஆண்டுகள் சம்பள தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா தொற்று காரணமாக இளம் வயதினர், குடும்பத்தில் சம்பளம் ஈட்டக்கூடிய முதன்மை நபர்கள் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அது போன்றவர்களின் திடீர் மறைவால் அவர்களது குடும்பம் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கும். இதனைக் கவனத்தில் கொண்டுள்ள மும்பையை தலைமையிடமாக கொண்ட சன் பார்மா நிறுவனம், கொரோனாவால் இறந்த தங்களது ஊழியர்களின் குடும்பத்தினருக்கு 2 ஆண்டுகள் சம்பளத் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.


latest tamil news



அதுமட்டுமின்றி இறந்த ஊழியர்களின் குழந்தைகளுடைய கல்விக் கட்டணத்தை அவர்கள் பட்டப்படிப்பு வரை செலுத்தப்படும் என்று நிறுவனம் உறுதியளித்தது. சன் பார்மா நிறுவனத்தில் 27,000 முழுநேர ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஏப்ரல் 1, 2020-க்கு பிறகு கொரோனாவால் இறந்தவர்களுக்கு இந்த உதவி பொருந்தும். அலுவலக குழு காப்பீட்டை தாண்டி இந்த உதவியானது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202114:59:33 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 Lllll
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-மே-202112:17:14 IST Report Abuse
S.Baliah Seer மனிதாபிமான நடவடிக்கை.சன் பார்மாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
13-மே-202112:03:38 IST Report Abuse
T.S.SUDARSAN சன் பார்மாவிற்கு பாராட்டுக்கள். இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். தேங்க்ஸ் டு சன் பார்மா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X