இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணம் என்ன?

Updated : மே 14, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (28+ 30)
Share
Advertisement
வாஷிங்டன்:'கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்து விட்டதாக தவறாக கணித்து, கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதே, இந்தியாவில் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருப்பதற்கு முக்கிய காரணம்' என, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் ஆன்டனி பாசி கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க
இந்தியா, கொரோனா ,பரவல், காரணம் என்ன?

வாஷிங்டன்:'கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்து விட்டதாக தவறாக கணித்து, கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதே, இந்தியாவில் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருப்பதற்கு முக்கிய காரணம்' என, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் ஆன்டனி பாசி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க பார்லி.,யின் சுகாதாரத் துறை நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் பரவும் இரண்டாவது அலைக்கான காரணம், அது மற்ற நாடுகளுக்கு கற்றுத் தரும் பாடம் குறித்து, எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, அமெரிக்க அதிபரின் ஆலோசகரும், பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணருமான, டாக்டர் ஆன்டனி பாசி கூறியதாவது:இந்தியாவில் முதலாவது அலை முடிவுக்கு வந்து விட்டதாக கருதி முன்னதாகவே கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.மக்களும் அலட்சியமாக செயல்பட்டனர். ஆனால், அப்போதுதான், முதலாவது அலை உச்சத்தில் இருந்துள்ளது. அதன் விளைவுதான், இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருப்பதற்கு காரணம்.

இது நமக்கு கற்றுத் தரும் பாடம். தொற்று நோய்களை எப்போதும் அசாதாரணமாக நினைத்து விடக் கூடாது. இதற்கு முன் பல நோய்களை கட்டுப்படுத்திவிட்டோம்; தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் என, சாதாரணமாக இருந்து விட்டோம்.அதனால் தான், மருத்துவ வசதிகளை, கட்டமைப்புகளை நாம் அதிகரிக்கவில்லை. இந்தியாவில் தற்போது ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு இதுவே காரணம்.

மேலும், நம்முடைய நாட்டை மட்டும் பாதுகாத்தால் போதாது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் இருந்தாலும், கொரோனா போன்ற வைரஸ் மற்ற இடத்துக்கும் பரவும் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14-மே-202112:02:16 IST Report Abuse
Sridhar இவங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது, ஆனா எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசுவானுங்க. கடந்துபோன விஷயங்களை பத்தி கமெண்டு கொடுக்கருதுல பெரிய 'நிபுணர்கள்'. இந்த FAUCI தான் Wuhan இன்ஸ்டிடியூட் research கு பணம் கொடுத்து கொரோனா வைரஸ் தயாரிக்க உதவினானாமே? FOX நியூஸ் ல போட்டு உடைக்கிறாங்களே?
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
13-மே-202123:26:13 IST Report Abuse
தத்வமசி அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நன்றாக கட்டுக்குள் வந்த கொரோனாவை மீண்டும் கிளப்பியது யார் ? நமது மக்கள் என்றே சொல்வேன். ஜனவரி பிரவரி மாதங்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தொடங்கி விட்டனர் மக்கள். ஏலகிரி, நீலகிரி, ஊட்டி, கொடைக்கானல் (இப்போதைய முதல்வரே சென்று வந்தார்), கோவா, திருப்பதி என்று முக்கிய இடங்கள் ஒன்று விடாமல் சென்று வந்தனர். ஒன்பதாம் வகுப்புக்கு மேலே வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது வகுப்புகளுக்கு கட் அடித்துவிட்டு, தேர்வுகளில் பங்கேற்காமல் ஊர் சுற்றியவர்களும் உண்டு. இப்படி ஊர் சுற்றினால் இப்படித்தான். அவர்களோடு சேர்ந்து கொண்டு எல்லோரும் இன்று அவதிப் படுகிறோம். ஆக்க தெரிந்த அம்மாவுக்கு ஆற பொறுக்கலே என்கிற புரட்சி தலைவர் பாடல்வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
13-மே-202123:17:43 IST Report Abuse
Mohan எலீசன் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X