அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ ஊக்கத்தொகை வரவேற்கத்தக்கது ; ராமதாஸ்

Updated : மே 13, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:'மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'கொரோனா எதிர்ப்பு போரில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்., மே, ஜூன் மாதங்களுக்கு, 15 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.'உயிரிழந்த, 43
 மருத்துவ ஊக்கத்தொகை  வரவேற்கத்தக்கது ; ராமதாஸ்

சென்னை:'மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:'கொரோனா எதிர்ப்பு போரில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்., மே, ஜூன் மாதங்களுக்கு, 15 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.'உயிரிழந்த, 43 மருத்துவப் பணியாளர் குடும்பங்களுக்கு, தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

'மருத்துவத் துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அவர்களின் மற்ற கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும்' என, நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று இந்த அறிவிப்புகள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொரோனா போரில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு, முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய் இழப்பீடு, பின் 25 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது தவறு. தற்போதைய அரசு, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
13-மே-202120:36:11 IST Report Abuse
Nesan முதல்வர் உங்களுக்கு ஊக்கம் கொடுக்கவில்லையா ?. எச்சிக்கையாலே காக்கை விரத்தவர் . வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு . d.m.k கூட்டணியில் இருந்து வெளியே வந்துட்டிங்கனு ஒரு முறை இப்போதைய முதல்வர் சொன்னார். உங்க டிவி அப்பத்தான் ஆரம்பித்தீங்க
Rate this:
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
13-மே-202119:28:34 IST Report Abuse
சொல்லின் செல்வன் அடுத்த தேர்தல்ல திமுக கூட்டணியில் எதிர்பாக்கலாம் போலிருக்குதே
Rate this:
Cancel
K.Varadharajulu - Chennai,இந்தியா
13-மே-202114:36:17 IST Report Abuse
K.Varadharajulu நீ ஐஞ்சு பைசா கொடுத்துடாத அடுத்தவன் கிட்ட ஆதாய போடுறதிலேயே இரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X