அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கொல்லைப்புற ஆட்சிக்கு புதுச்சேரியில் முயற்சிப்பதா?'

Added : மே 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'புதுச்சேரியில், கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற, பா.ஜ., முயற்சிப்பதா... மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்' என, நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் பதவியேற்கும் முன், மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களை, மத்திய அரசு நியமித்திருப்பது

சென்னை:'புதுச்சேரியில், கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற, பா.ஜ., முயற்சிப்பதா... மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்' என, நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் பதவியேற்கும் முன், மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களை, மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய எம்.எல்.ஏ.,க்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் வாயிலாக, பா.ஜ.,வின் எண்ணிக்கையை, ஒன்பது ஆக உயர்த்திருப்பது எதேச்சதிகாரமானது.

புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை, இந்த நியமன எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை வைத்து சீர்குலைத்து, கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற, பா.ஜ., செய்யும் முயற்சி அது என்ற சந்தேகம், புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, மூன்று எம்.எல்.ஏ.,க் கள் நியமனத்தை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
13-மே-202103:54:54 IST Report Abuse
அன்பு நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றில் இருந்து பத்தாக உயர்த்தினால், புதுச்சேரிக்கு தேவையானவற்றை மத்திய அரசே செய்யும் என்பதால் மக்கள் ஒத்துக்கொள்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X