பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி இறக்குமதி: தமிழக அரசு முடிவு

Updated : மே 14, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை :கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதால், அவற்றை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.அனைத்து மாநிலங்களிலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதில் இருந்து 45 வயது
தடுப்பூசி, இறக்குமதி,தமிழக அரசு முடிவு

சென்னை :கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதால், அவற்றை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.

அனைத்து மாநிலங்களிலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி தமிழகத்திற்கு, 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது, 18 வயது முதல், 45 வயது வரை உள்ளவர்களுக்கு செலுத்த போதுமானதாக இல்லை.

எனவே, உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் வழியே தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதற்கான உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதில் இருந்து, 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும், தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசு முனைப்புடன் எடுக்க உள்ளது.தமிழகத்தில் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும்போது, மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது.

இதை உயர்த்தி வழங்கும்படி, பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு, 280 டன்னில் இருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது.
எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைக்கவும், பிற மாநிலங்களில் உள்ள எக்கு உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து, தமிழகத்திற்கு ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அவற்றை மருத்துவமனைகளுக்கு சீராக வினியோகம் செய்ய, தேவையான நடவடிக்கை எடுக்கும்படி, தொழில் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.கூட்டத்தில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
13-மே-202115:29:35 IST Report Abuse
siriyaar முதல்வரின் பெயரை கருதி , ரஷ்யா அவர்கள் தடுப்பூசியை இவருக்கு இலவசமாக வழங்கும். இதனால் மக்கள் பயனடைவார்கள்.
Rate this:
Balasubramanyan - Chennai,இந்தியா
13-மே-202122:23:47 IST Report Abuse
Balasubramanyanகம்யூனிசம் மறைந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ஸ்டாலின்கிராட் பெயரை மாற்றி ரொம்ப வருடம் ஆகி விட்டது. பெயரை பார்த்தால் Russia மருந்து கொடுக்காது....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-மே-202112:37:54 IST Report Abuse
RajanRajan திராவிட களச்சி விளையாட்டு தடுப்பூசி இறக்குமதி டெண்டர்ல துவங்குது மக்களே உஷாராகிக்கோங்க. தரமற்ற சீன தடுப்பூசி வேறு பெயர்களில் களமிறங்க போகுது. திராவிட நரபலியை எப்படி தவிர்க்கலாம் என சிந்திக்கவும்.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
13-மே-202111:39:14 IST Report Abuse
Dr. Suriya இதுல எவ்வளவு கொள்ளை அடிக்க போறானுவோலோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X