அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை அரசுக்கு கமல் கோரிக்கை

Added : மே 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, பெட்ரோல், டீசல் விலையை, தமிழக அரசு குறைக்க வேண்டும்' என, கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:தேர்தல் அறிவித்த நாள் முதல், பெட்ரோல், டீசல் விலையில், எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. கடந்த, 66 நாட்களாக உயராமல் இருந்த விலை, தேர்தல் முடிந்ததும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கொரோனா முதல் அலையில் மூழ்கிய
 பெட்ரோல், டீசல் விலை அரசுக்கு கமல் கோரிக்கை

சென்னை:'தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, பெட்ரோல், டீசல் விலையை, தமிழக அரசு குறைக்க வேண்டும்' என, கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:தேர்தல் அறிவித்த நாள் முதல், பெட்ரோல், டீசல் விலையில், எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. கடந்த, 66 நாட்களாக உயராமல் இருந்த விலை, தேர்தல் முடிந்ததும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கொரோனா முதல் அலையில் மூழ்கிய பொருளாதாரம் மீளாத நிலையில், மக்கள் வேலையிழப்பு, வருவாய் இழப்பு, மருத்துவ செலவினங்கள் என, அல்லல்பட்டு வருகின்றனர்.

இரண்டாவது அலை, ஒரு சுனாமியை போல் தாக்கி, தமிழக மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது, வேதனை அளிக்கிறது. மது விற்பனையை, வருவாய் வாய்ப்பாக கருதுவதை போல், எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும், வருமானத்தை பெருக்கும் வழிகளாக, மத்திய, மாநில அரசுகள் கருதுகிறதோ என்ற, அச்சம் ஏற்படுகிறது.

விலையை குறைக்கும் எண்ணம், மத்திய அரசுக்கு இல்லை. 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலை குறைக்கப்படும்' என, தேர்தல் வாக்குறுதியில் கூறியதை, உடனே அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
13-மே-202103:52:43 IST Report Abuse
அன்பு மத்திய அரசை எதிர்த்து பேசினால், ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஐடி ரைடு வரும் என்று பயந்து, மாநில அரசை மட்டும் எதிர்க்கிறார் பாருங்கள். இங்கே தான் நமது ஆண்டவரின் புத்திசாலித்தனம் விளையாடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X