பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ஜீயர் தேர்வுக்கான அறிவிப்பு நிறுத்தி வைப்பு

Updated : மே 14, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (50+ 83)
Share
Advertisement
சென்னை :பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 51வது ஜீயரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது.திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 51வது ஜீயர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கடந்த 6ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத் துறை, அறிவிப்பு
ஸ்ரீரங்கம் ஜீயர் தேர்வு, அறிவிப்பு, நிறுத்தி வைப்பு

சென்னை :பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 51வது ஜீயரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 51வது ஜீயர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கடந்த 6ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத் துறை, அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்புக்கு, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் பல்வேறு ஆன்மிக நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தற்போது, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஸ்தலத்தார்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து, கோவில் ஸ்தலத்தார்கள் கூறியதாவது:ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை முழுமையாக சீரமைத்தவர் ராமானுஜர். அதன் பின், கோவிலை நிர்வகித்து வந்த ஸ்தலத்தார்கள், எம்பார் வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்பவரை அங்கீகரித்து, கோவில் கைங்கர்யங்களை வழங்கினர்.

அவர் தான் முதல் பட்டம். கடைசியாக, 50வது பட்டம் வரை, ஸ்தலத்தார் தகுதியானவரை தேர்வு செய்து, அவருக்கான நன்முறைகளை கூறி, கைங்கர்யங்களை செய்து வருகின்றனர்.
இதன்படி, 51வது ஜீயர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரைமுறை செய்பவர்கள் ஸ்தலத்தார். இந்த மரபை மீறும் வகையில், ஜீயர் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியிட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது.

கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை, எப்படி மதம் சார்ந்த நியமனங்களை செய்ய முடியும்?இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், மதம் சார்ந்த அமைப்புகளை நிர்வகிப்பதற்கும், நியமனங்களுக்கான உரிமையையும், மடங்களுக்கு வழங்கி உள்ளது. இதை மீறுவதாகவும் அறநிலையத்துறை அறிவிப்பு உள்ளது.
சம்பிரதாயத்தைச் சார்ந்துள்ள மத குருமார்களையும், அறநிலையத்துறை நியமிப்பதாக கூறுவது, ஆன்மிகத்தின் ஆணிவேரையே பறிக்கும் செயல்.இவ்வாறு ஸ்தலத்தார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜீயர் நியமன அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டதாக அறநிலையத்துறை கூறியுள்ளது.ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது:
கடந்த முறை போல இந்த முறையும், ஜீயர் தேர்வுக்கான அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, ஜீயர் தேர்வுக்கான அறிவிப்பு, தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


அரசுக்கு நன்றி

ஜீயர் தேர்வுக்கான அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத்தும் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (50+ 83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THAMIRAMUM PAYANPADUM THANGAM MATTUMALLA - india,இந்தியா
14-மே-202112:48:01 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM THANGAM MATTUMALLA கோவிலை நிர்வகிக்கிக்கும் மக்களே ஒருவாயோருக்கு அடித்துக் கொண்டு யார் கோவில் சொத்தை கூடுதலாக சாப்பிடுவது என்று சண்டை போட்டு அல்லது நிர்வாகிகள் ஒன்று கூடி பெரிய கோவிலின் சொத்துக்களை அபகரித்து பிப்பு கோட்டைக்கு பொய் கோவிலை மூடி கோவில் திருவில்லை நிறுத்துவதும் திருவிழாவிலில் சண்டை போடுவது ஹிந்து மத்தில் நடப்பது வழக்கம் அதற்க்கு தான் அறநிலைய துறை முன்வந்து சில நடவகை மூலம் கோவில்களை இன்னும் திறந்து வைத்து இருக்கிறது இல்லையெனில் எப்போதெவ் ஸ்ரீரங்கம் கோயில் கூட ம்மோட டப்பட்டு இருக்கும்
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
13-மே-202123:46:59 IST Report Abuse
John Miller ஒரு தென்கலை ஐயங்கார் ஜோராக தேர்வு செய்ய எதிர்த்த ராஜா மற்றும் அடிமைகளை எதிர்த்து இந்துக்கள் ஒன்று திரள வேண்டும்
Rate this:
sankar - Nellai,இந்தியா
14-மே-202108:26:04 IST Report Abuse
sankar- நீங்கள் உங்கள் சர்ச்சுகளை அரசிடம் கொடுத்துவிடுங்கள், அவர்கள் உங்கள் பிஷப்புகளை தேர்ந்து எடுக்கட்டும் - சரியா...
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
13-மே-202121:07:04 IST Report Abuse
Krish நாட்டை ஆழ தான் இந்த தமிழ் பூமி ஸ்டாப்களின் அவர்களை நம்பி வோட்டு போட்டது . வோட்டு ஆரபிக்கும் வரை இலாமிய கிருத்துவ மதத்தினரின் ஓட்டுக்காக அவர்களை ஆதரித்தது சரி. தேர்தலில் வெற்றிபெற்றபின் ஸ்டாலின் ஜீயர் அறிவிப்பு போன்றவற்றை அனுமதித்து இருக்க கூடாது . ஏன் என்றால் அவர் இப்போது எல்லாமதத்தினரையும் மதித்து ,அந்த மதத்து ரூல் படி நடக்க விடவேண்டும் . தமிழக மக்கள் ஸ்டாளிடம் எதிர்ப்பார்ப்பது நல்ல , சமசீர் அரசாங்கம் . அவர் தந்தை அதை கடைபிடித்தார் , அனுபவம் முதிர்ந்ததால்தன பின்னைய ஆட்சிக்காலத்தில் 'இந்த மதத்தினரையும் அவர் புண் படுத்தும்படி பேசவில்லை .ஸ்டாப்களின் அவர்கள் அறியாமலேயே இந்த தப்பு நடந்திருக்க வாய்ப்பு உண்டு. பெருமாள் மீது அவருக்கும் அவரது மனைவிக்கும் அதிக பக்தி உண்டு. அவர் வீட்டுக்கு வந்த திருப்பதி குருமார்களின் வேத வாக்கியங்களை மரியாதையாக கேட்டார் , ஒரு ஐயங்கார் குருக்கள் ' ஸ்டாப்களின் கையில் கட்டிய காவல் தயிரையும் கட்ட விட்டார் . அவரை சுற்றியுள்ளவர்கள் ஸ்டாலினின் நற்பெயரை காக்க வேண்டுகிறேன் ., அவர் சில அரசியல் தலைவர்களைப்போல் 'இந்து அல்ல ' என்று கூறியதில்லை . தானும் ஒரு 'இந்து ' என்றே கூறுகிறார் . அவரை மதிப்போம் , அவர் நாள் ஆட்சி தர கடவுள் அவருக்கு துணைபுரிய வேண்டுவோம். சில இஸ்லாமியர்கள் பயங்கரம் செய்வதால் எல்லா இஸ்லாமியரையும் பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியாது , அதேபோல் 'சில பிராமிணர்கள் தப்பு செய்வதால் ' எல்லா பிராமணர்களையும் திட்டாதீர்கள் , அவர்கள் மிக மிக மாறிவிட்டார்கள் .அவர்களில் பலர் வாய் ஆதாரம் அற்றவர்கள் , அவர்கள் முன்னோர்கள் செய்த தப்பிற்கு இன்றும் அவப்பெயர் படுகிறார்கள் . இன்னும் ஒன்று அவர்கள் அவர்கள் வீட்டில் 'தமிழ் 'தான் பேசுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X