வாகன பேட்டரிகள் தயாரிப்பு : ரூ.18,100 கோடி ஒதுக்கீடு

Updated : மே 12, 2021 | Added : மே 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், காற்று மாசை குறைக்கவும், பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு நடவடிக்கையாக
 வாகன பேட்டரிகள், தயாரிப்பு, ரூ.18,100 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி :வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், காற்று மாசை குறைக்கவும், பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு நடவடிக்கையாக பேட்டரிகளால் இயக்கப்படும், மின்சார வாகனங்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இது பற்றி, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

வாகன பேட்டரிகள், 50 ஜிகா வாட்ஸ் சக்தி அடங்கியதாக இருக்கும். இதன் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கு, 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இதனால், வாகன பேட்டரி தயாரிப்பில், சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை பெறும். இதனால், பேட்டரிகளை அதிகளவில் பயன்படுத்தும் மின்னணு பொருட்கள், மின்சார வாகனங்கள், சூரிய மின் தகடுகள் ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velusamy Ramesh - Thanjavur,இந்தியா
13-மே-202111:14:56 IST Report Abuse
Velusamy Ramesh The government is giving as loan...?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-மே-202109:05:57 IST Report Abuse
Lion Drsekar லஞ்சம் வாங்காமல் சுதந்திரமாக தொலதிபர்களை இயங்க வைத்தால் இதுபோன்ற பல லட்சம் கோடி விரயம் செய்யவேண்டாம் ? யார் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X