மத்திய பிரதேசத்திலும் ஆற்றில் மிதக்கும் உடல்கள்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
பன்னா : பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தை அடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள ரன்ஜ் ஆற்றில், பலியானோர் உடல்கள் மிதப்பது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தில், உத்தர பிரதேசத்தின் எல்லையில் உள்ள பன்னா மாவட்டத்தின் நந்தன்பூர் கிராமத்தின் ரன்ஜ் ஆற்றில், பலியானோர் உடல்கள்

பன்னா : பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தை அடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள ரன்ஜ் ஆற்றில், பலியானோர் உடல்கள் மிதப்பது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தில், உத்தர பிரதேசத்தின் எல்லையில் உள்ள பன்னா மாவட்டத்தின் நந்தன்பூர் கிராமத்தின் ரன்ஜ் ஆற்றில், பலியானோர் உடல்கள் வீசப்படுவதாக, அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:இரு மாநிலங்களின் எல்லையில் செல்லும் ஆற்றில், உத்தர பிரதேசத்தில் இறந்தவர்களின் உடல்களை வீசி உள்ளனர்.இந்த ஆற்றில் இதுவரை, ஆறு உடல்கள் வரை மிதந்து சென்றுள்ளன. அவை, கொரோனா பாதிப்பால் பலியானோர் உடல்களாக இருக்கலாம் என்பதால், கிராமத்தில் தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டு உள்ளது.


latest tamil news




இந்த பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்தின் குழாய்களில் தண்ணீர் கிடைக்காதபோது, ஆற்று நீரைத் தான் குடிக்க பயன்படுத்துகிறோம். இதனால், எங்கள் கிராமத்திலும் கொரோனா பரவும் என, அச்சம் எழுகிறது.இதுபோல் ஆற்றில் உடல்களை வீசுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சமீபத்தில், பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில், கங்கை நதியிலிருந்து, 70க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மத்திய பிரதேசத்திலும் ஆற்றில் உடல்கள் மிதப்பது, அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202115:36:34 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) சம்மந்த பட்ட மாநில அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறது ???,
Rate this:
Cancel
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
13-மே-202112:26:16 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி KUMBA மேல வினால் வந்த அச்சே தின் இது , பாவம் கடவுள் பெயரால் வரவழைத்து இந்த பரிதாபம் ஏற்படுத்திய பாவிகள்
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
13-மே-202112:12:12 IST Report Abuse
sahayadhas ராணு வீரர்களுடன் போஸ் கொடுத்த ஐயா, இப்ப காணோமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X