பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : ஒண்ணும் புரியலையே!

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா தொற்று, 2019 இறுதியில் தன் ஆட்டத்தை துவக்கி, முதல் அலையை 2020ல் முடித்து, தற்போது 2021ல் இரண்டாவது அலையை வீசிக் கொண்டிருக்கிறது. இரண்டு அலையிலும், சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை மக்கள் பின்பற்ற

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா தொற்று, 2019 இறுதியில் தன் ஆட்டத்தை துவக்கி, முதல் அலையை 2020ல் முடித்து, தற்போது 2021ல் இரண்டாவது அலையை வீசிக் கொண்டிருக்கிறது. இரண்டு அலையிலும், சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது. அவசியமின்றி வெளியில் சுற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. முதல் சுற்றில் பாதிக்கப்பட்டோருக்கு, சத்தான ஆகாரம் கொடுத்து ஓய்வு கொடுத்தனர். அதுவே அவர்களை, நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற போதுமானதாக இருந்தது. அதற்காக எந்த மருந்தும்,மாத்திரையும், ஊசியும் போட்டதாக தகவல் இல்லை. இறப்பு சதவீதம் குறைவாகவே இருந்தது.latest tamil newsமுதல் அலையில் இறந்தவரின் உடலை, உறவினரிடம் ஒப்படைக்காமல் அரசே முழு பாதுகாப்புடன் அடக்கம் செய்தது. இப்போது இரண்டாவது அலையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இரு தவணைகளில் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. தடுப்பூசி தான் போடப்படுகிறதே தவிர, கொரோனாவை குணமாக்கும் மருந்து, கண்டுபிடிக்கப்படும் நிலையில் தான் உள்ளது. முதல் அலையின் போது கொரோனா தாக்கி இறந்தவரின் உடலை, உறவினரிடம் காட்டக் கூட தயங்கிய அரசு, தற்போது இரண்டாவது அலையில் இறப்பவரின் உடலை, அப்படியே உறவினரிடம் ஒப்படைத்து விடுகிறது. அதுவும் இறந்தவர் உடலை, முழு பாதுகாப்புடன், 'பேக்' செய்யாமல் உறவினரிடம் ஒப்படைக்கின்றனர்.


latest tamil newsஇது ஏன் என புரியவில்லை! இரண்டாவது அலையில், நோய் தாக்கி இறந்தவரின் உடலில் இருந்து நோய் கிருமி பரவாது என, ஏதாவது ஆராய்ச்சி உறுதி செய்திருக்கிறதா? ஒண்ணுமே புரியலை... மர்மமாக இருக்கிறதே!

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
13-மே-202123:17:47 IST Report Abuse
g.s,rajan Corona is simply a fake ,India is reeling under severe Economic crisis, both the Central and state Governments Could not handle the current economic situation, thus worsening the economy further so every one should beg and must fulfill their livelihood. It is definitely a diverting tactics. g.s.rajan Chennai. g.
Rate this:
Cancel
Muthu - Chennai,இந்தியா
13-மே-202123:11:15 IST Report Abuse
Muthu தேவை உடனடி தடை ஒட்டுமொத்த தமிழ்நாடே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்த சூழ்நிலையில், ஒருசில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பை நடிகர் நடிகைகளின் எதிர்ப்பையும் மீறி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும். இந்த அரசு செய்யும் என நம்புகிறேன்.
Rate this:
Cancel
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
13-மே-202121:21:30 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி முழு முடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி அரசின் உத்தரவுகளை மீறுகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் லாக்டவுன் கொண்டு வந்தோம்.அதே சமயம் மக்கள் கஷ்டப்பட கூடாது என்று தளர்வுகளை கொண்டு வந்தோம் ஆனால் சிலர் இந்த தளர்வுகளை மிஸ் யூஸ் செய்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X