சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை! விழி பிதுங்கும் அரசு மருத்துவமனைகள்; சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
கோவை : கோவையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில், போதிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் இல்லாததால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, மயக்கவியல் துறை, எலும்பு முறிவு, குழந்தைகள் நலப்பிரிவு,

கோவை : கோவையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில், போதிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் இல்லாததால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.latest tamil newsகோவை அரசு மருத்துவமனையில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, மயக்கவியல் துறை, எலும்பு முறிவு, குழந்தைகள் நலப்பிரிவு, தீக்காயம், காது மூக்கு தொண்டை, கண் மருத்துவம், இருதய நோயியல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில், பொது மருத்துவம், சுவாசம் மற்றும் நுரையீரல், தோல் மருத்துவம், நரம்பியல், சிறுநீரகவியல், அறுவை சிகிச்சை பிரிவு, குடல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, இருதயவியல் துறை, காசநோய், தொழுநோய் பிரிவு, ஏய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய், உடல் கூரியல், பிசியாலஜி, உள்பட 40 துறைகள் உள்ளன.கொரோனா தொற்றுக்கு முன்பே, கோவை அரசு மருத்துவ மனையில் புறநோயாளிகளாக 7,500 பேர், உள் நோயாளிகளாக 1,500 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

அந்த காலக்கட்டத்திலேயே, டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றுக்கு மட்டும், 900க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 500 டாக்டர்களும், 900 நர்ஸ்களும் இங்கு பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், இருப்பதோ, வெறும் 250 டாக்டர்களும், 300 நர்ஸ்கள் மட்டுமே. அதேபோல், முதுநிலை மருத்துவ மாணவர்கள், 200 பேர் இங்கு பணியாற்றுகின்றனர்.இந்த சொற்ப அளவிலான டாக்டர்கள் நர்ஸ்களை கொண்டு, கொரோனா மற்றும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமான காரியம். இதில், கொரோனா பணியில் ஈடுபடுவோர், 14 நாட்கள் பணியாற்றிவிட்டு, குறைந்தது ஏழு நாட்கள் தனிமையில் இருக்கின்றனர். இதுபோக, தவிர்க்க முடியாத காரணங்களால், சில டாக்டர்களும் விடுப்பில் சென்று விடுகின்றனர்.


latest tamil newsஇதுஒருபுறம் இருக்க, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், மொத்தமே 80 டாக்டர்கள் தான் பணியில் உள்ளனர். தவிர, 125 முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளனர். இப்படியொரு நெருக்கடியான காலத்தில், ஆக்ஸிஜனுக்கு அடுத்தபடியாக, டாக்டர்கள் நர்ஸ்கள் என ஆட்கள் பற்றாக்குறையும் நிலவுவதால், சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் திணறி வருகின்றன.


'50 நர்ஸ்கள் நியமனம்' :-


கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''கொரோனா பணியில் ஈடுபடும் டாக்டர்கள், ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின், கொரோனா அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப் படுவர். தற்போது, 60 டாக்டர்கள், 100 நர்ஸ்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். தவிர, 120 டாக்டர்களும், 150க்கும் மேற்பட்ட நர்ஸ்களும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


latest tamil news
நர்ஸ்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அண்மையில் 50 நர்ஸ்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.இதுதொடர்பாக, இ.எஸ்.ஐ.,டீன் ரவிந்திரனை பல முறை தொடர்பு கொண்டும், குறுந்தகவல் அனுப்பியும், வழக்கம்போல பதிலளிக்கவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash - Chennai,இந்தியா
13-மே-202114:12:08 IST Report Abuse
Prakash கம்யூனிஸ்டுகளின் மிக நெருங்கிய நண்பர்களான CHINA விடம் VACCINE வாங்கி தி மு க விற்கு கொடுக்கலாம் ...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-மே-202113:42:14 IST Report Abuse
sankaseshan தீயமுகாவுக்கு நல்ல சான்ஸ் அவங்களுக்கு ஆதரவான நர்ஸுகளையும் டொக்டர்களையும் அமர்த்திவிடலாம் ஒதுக்கீட்டில் பாஸ் ஆனவர்கயும் புகுத்திவிடலாம் கமிசன் கொட்டோகொட்டு என்று Kuviyum
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
13-மே-202111:01:53 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இதுக்கும் அதிமுக ஆட்சியை குறை சொல்லிட்டா போச்சி என்ன ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X