மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
பீஜிங் : 'வரும் 2027க்கு முன்னதாகவே, சீனாவை விட அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா உருவாகும்' என, சீன மக்கள் தொகை கணக்கீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஐ.நா.,வின் கணக்கீட்டின் படி, கடந்த 2019ல், சீன மக்கள் தொகை 143 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை 137 கோடியாகவும் இருந்தது.'வரும் 2027ல், சீனாவை விட அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா உருவாகும்' என, ஐ.நா., கணிப்புகளை

பீஜிங் : 'வரும் 2027க்கு முன்னதாகவே, சீனாவை விட அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா உருவாகும்' என, சீன மக்கள் தொகை கணக்கீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



ஐ.நா.,வின் கணக்கீட்டின் படி, கடந்த 2019ல், சீன மக்கள் தொகை 143 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை 137 கோடியாகவும் இருந்தது.'வரும் 2027ல், சீனாவை விட அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா உருவாகும்' என, ஐ.நா., கணிப்புகளை வெளியிட்டது. இந்நிலையில், சீனாவின் மக்கள் தொகை எண்ணிக்கையை, அந்நாடு சமீபத்தில் வெளியிட்டது. அதில், முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், வேலைக்கு செல்லும் இளம் வயதினர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. சீனாவில், குழந்தைப்பேறும் குறைந்துவருவதாக, அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், சீன மக்கள் தொகை கணக்கீட்டு நிபுணர்கள், கணிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டனர். அதில், 'ஐ.நா., கணித்ததை காட்டிலும், மிக விரைவாக, வரும் 2024ம் ஆண்டுக்குள்ளாகவே, இந்தியாவின் மக்கள் தொகை, சீனாவை தாண்டிவிடும்' என தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202122:06:09 IST Report Abuse
ஆப்பு வடக்கே பொறந்து தெற்கே பஞ்சம் பொழைக்க வந்துருவாங்க. ஓட்டை அவிங்களுக்குப் போட்டுட்டு ரயிலேறி சென்னை, கோவைன்னு. டாஸ்மாக் தமிழன் அவிங்களை வாழவைப்பான்
Rate this:
Cancel
13-மே-202122:06:16 IST Report Abuse
ஆப்பு வடக்கே பொறந்து தெற்கே பஞ்சம் பொழைக்க வந்துருவாங்க. ஓட்டை அவிங்களுக்குப் போட்டுட்டு ரயிலேறி சென்னை, கோவைன்னு. டாஸ்மாக் தமிழன் அவிங்களை வாழவைப்பான்
Rate this:
Cancel
Dan - Chennai,இந்தியா
13-மே-202114:01:26 IST Report Abuse
Dan இந்தியர்கள் உழைப்பாளிகள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X