பொது செய்தி

இந்தியா

'தாமதமான எச்சரிக்கையே பேரழிவுக்கு காரணம்'

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : 'கொரோனா வைரஸ் பரவல் குறித்து, உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரித்து இருந்தால், மிகப் பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டு இருக்கும்' என, சர்வதேச விசாரணை குழு தெரிவித்துள்ளது.கொரோனா பெருந்தொற்றுக்கு, உலகம் முழுவதும், 16 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 3.27 கோடி பேர் பாதிப்புடன், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா
Corona Virus, Covid 19, Corona, கொரோனா, கோவிட் 19, கொரோனா வைரஸ், பேரழிவு

புதுடில்லி : 'கொரோனா வைரஸ் பரவல் குறித்து, உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரித்து இருந்தால், மிகப் பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டு இருக்கும்' என, சர்வதேச விசாரணை குழு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு, உலகம் முழுவதும், 16 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 3.27 கோடி பேர் பாதிப்புடன், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள், முறையே, 2.33 மற்றும் 1.52 கோடி பாதிப்புடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவத்துவங்கிய போது, உலக சுகாதார அமைப்பு, இந்த விவகாரம் குறித்து மிக மெத்தனமாக செயல்பட்டுள்ளதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக கூறிய அவர், அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தினார்.


latest tamil newsஇந்நிலையில், கொரோனா பரவலை, உலக நாடுகள் எப்படி எதிர்கொண்டன என்பது குறித்து விசாரணை நடத்த, சர்வதேச அளவிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, நேற்று அறிக்கை வெளியிட்டனர். அதில், 'கொரோனா பரவல் குறித்து, உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தால், இவ்வளவு பெரிய பேரழிவை தடுத்திருக்க முடியும்' என, தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
13-மே-202112:24:16 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி நிறய PENDAMIC இருக்கும் எண்ணிக்கையை மறைந்துள்ளது வெற்றி நடை போட தமிழகம் இதுவும் எலேச்டின் காக செய்த ஏற்படு என்று தெரிகிறது , அதனால் தான் இவ்வளவு விளைவு வந்துள்ளது , இதற்கு எடப்பாடி மோடி தான் காரணம்
Rate this:
Cancel
P S Balaji - Mumbai,இந்தியா
13-மே-202112:08:13 IST Report Abuse
P S Balaji கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி மாதத்தில் ஆரம்பித்து, மார்ச் மாதத்தில் அதன் எண்ணிக்கை உயர தொடங்கியது. இங்கு எலெக்ட்டின் மற்றும் கும்ப மேளா அப்பொழுது இல்லை. ஏப்ரல் மாதம் முதல் லாக்டவுனில் இருக்கிறோம். மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தவறிவிட்டனர்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-மே-202111:42:22 IST Report Abuse
Sridhar அதுதான் ஆரம்பித்திலிருந்தே WHO ஒரு டுபாக்கூர் அமைப்புங்கறது தெளிவாயிடுச்சே. 'மனிதனுக்கு மனிதன் பரவாது' என்று சொன்னவர்கள் ஆயிற்றே. ஆனால் அதை விடுங்கள். இந்திய அரசு சற்றும் சளைக்காமல் எல்லா நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்துகொண்டு வந்ததே. மார்ச் 16 ஆம் தேதி பிரதமர் இரண்டாம் அலை சாத்தியக்கூறுகளை குறிப்பிட்டு முதல் மந்திரிகள் மகாநாட்டில் பேசுகிறார். அப்போது உத்தவ் கெஜ்ரி போன்றோர் அவர்கள் கைபேசியை பார்த்துக் கொண்டும் சோம்பல் முறித்துகொண்டும், எதோ கொரோனா கடந்துபோன விஷயம் அதைப்பற்றியே இந்த பிரதமர் பேசி போராடிக்கிறாரே என்பதுபோல், கவனம் செலுத்தாமல் இருந்தார்களே? இவர்களை போன்ற, மக்கள் நலனில் சற்றும் அக்கறையில்லா மாநில அரசுகளினால்தானே இன்று இப்படிப்பட்ட நிலைமை? இவர்கள் WHO வை விட மோசமானவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X