அரசியல் செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: பா.ஜ., முருகன்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
சென்னை : ''முதல்வர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து முருகன் விடுத்த அறிக்கை: கடந்த ஆண்டு ஏப்., 15ல், தி.மு.க., உள்ளிட்ட 11 கட்சி கூட்டணியினர், 'கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு, சிறப்பு ஊதியம், ஊதிய
BJP, Murugan, 1 crore, L Murugan, Bharatiya Janata Party,

சென்னை : ''முதல்வர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முருகன் விடுத்த அறிக்கை: கடந்த ஆண்டு ஏப்., 15ல், தி.மு.க., உள்ளிட்ட 11 கட்சி கூட்டணியினர், 'கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு, சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, தமிழக அரசு, 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். அப்போதைய அ.தி.மு.க., அரசு, ஆக., 6ல், இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தபோது, 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.


latest tamil news



'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்ற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றை பேசிவிட்டு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது, மாற்றி பேசுவது அழகல்ல.ஆகவே, முதல்வர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாய்; குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலையும் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202117:55:44 IST Report Abuse
ஆப்பு முருகன் ஐயா... நேரா போய் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செஞ்சுருங்க. ஒரு கோடி குடுக்கணும்னு உதார் உட்டவர் என்ன செய்யப் போறார்னு பாக்கலாம். நம்ம நீதியரசர்கள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.
Rate this:
Cancel
niec99 - chennai,இந்தியா
13-மே-202116:58:28 IST Report Abuse
niec99 இதற்கும் காலம் வரும் காத்திருபோம்
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
13-மே-202116:55:43 IST Report Abuse
Raman முருகா, உங்க கட்சியில் எம் எல் ஆக்கள் ஒருத்தரும் இல்லையா? தேர்தலில் தோத்துப்போன நீ வந்து கோரிக்கை வைக்கிறே ? எங்க போனாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X