பொது செய்தி

இந்தியா

இளசுகளை குறிவைக்கும் கொரோனா 2ம் அலை

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா இரண்டாம் அலையில் கவனமாக இருக்கும், 60களை விட, அலட்சியமாக இருக்கும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பலியாகின்றனர்.கடந்த முறை கொரோனா பரவல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆட்டிப் படைத்தது. நமக்கு வராது என்ற அலட்சியத்துடன் இளசுகள், 'மாஸ்க்' அணியாமல் நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுகின்றனர். கொரோனா வந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தியால் வென்று விடலாம் என
India Fights Corona, Corona Second wave, Youths, Corona Virus, Covid 19

புதுடில்லி: கொரோனா இரண்டாம் அலையில் கவனமாக இருக்கும், 60களை விட, அலட்சியமாக இருக்கும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பலியாகின்றனர்.

கடந்த முறை கொரோனா பரவல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆட்டிப் படைத்தது. நமக்கு வராது என்ற அலட்சியத்துடன் இளசுகள், 'மாஸ்க்' அணியாமல் நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுகின்றனர். கொரோனா வந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தியால் வென்று விடலாம் என சளி, காய்ச்சல் பாதிப்பின், ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெறாமல் விடுகின்றனர். பாதிப்பு அதிகமாகி, மூச்சு திணறல் ஏற்படும் நிலையில், மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஏற்கனவே ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத நிலையில், மூச்சுக் காற்றுக்காக வரிசையில் காத்து இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.மற்றொரு தரப்பினர், கொரோனா வந்தால் சமுதாயத்தில் ஒதுக்கி விடுவர் என்ற பயத்தில், காய்ச்சலுக்கு வீட்டிலேயே கை வைத்தியம் செய்து, அறியாமையால் மாட்டிக் கொள்கின்றனர். இதனால், 20 - 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பலியாவது அதிகரிக்கிறது.


latest tamil news'இது ஒதுக்கப்பட வேண்டிய நோய் இல்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அலட்சியம், அறியாமையை விடுத்து லேசான காய்ச்சல், உடல்வலி இருந்தாலே, ஆரம்பகட்ட சிகிச்சை பெறுவது அவசியம்' என்பதே டாக்டர்களின் அறிவுரை.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-மே-202115:09:42 IST Report Abuse
Loganathan Kuttuva Use oximeter ti check corona and take the medicines accordingly.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-மே-202106:58:59 IST Report Abuse
A.George Alphonse நோய்வந்தால் ஏன் மறைக்கவேண்டும்?வக்கீலிடமும்,டாக்டரிடமும் எதையுமே மறைக்கக்கூடாதுன்னு நம் முன்னோர்கள் பல்லாண்டுகள் முன்பே கூறியுள்ளார்கள். வியாதி வராத மனிதர்களே இல்லை.எல்லோருக்குமே வியாதிகள் வரும். Precaution is better than cure.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
13-மே-202106:57:05 IST Report Abuse
Svs Yaadum oore இப்போது வந்துள்ள காரோண பற்றி டாக்டர்களுக்கு எதுவும் தெரியவில்லை ....இளைஞர்களை பாதிக்கிது ...நேற்று 30,355 பேருக்கு கொரோனா, 293பேர் உயிரிழப்பு.....இந்த சுகாதாரத்துரை அமைச்சர் என்ன செய்கிறார் ??....அவர் என்ன சென்னைக்கு மட்டும் அமைச்சரா ??...சென்னையிலேயே அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை ....கோவை , திருச்சி , மதுரை , கன்னியாகுமாரி , ஈரோடு என்று பல இடங்களில் காரோண அதிகரிப்பு மக்கள் உயிரிழப்பு ..திருச்சியில் நேற்று 12 நபர்கள் உயிரிழப்பு , கோவையில் 18 ...இந்த அமைச்சரவையில் பல மூத்த அமைச்சர்கள் இருந்தாலும் இது பற்றி வாய் திறப்பதில்லை ...எல்லா தி மு க அமைச்சர்களும் மாவட்டத்தில் பெரிய ராஜ பரம்பரை .......ஊரடங்கிலும் பல குறைபாடுகள் ....தினம் தினம் ஊரடங்கு தளர்த்தி பல சலுகை அறிவிப்பு ...போலீஸ் செயல்பட அனுமதியில்லை ....இளைஞர் பாதிப்பு என்று தெரிந்தும் , நேற்று பள்ளி தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்று அமைச்சர் அறிவிப்பு ....தேர்வு நடத்த வேண்டிய நேரத்தில் நடத்துங்க ...இன்னும் இரெண்டு மாதத்திற்கு நடத்த முடியாது ...இப்போது தேர்வு பற்றி பேச வேண்டிய அவசியமென்ன ....இது மாணவர் பெற்றோர் மன உளைச்சல்தான் ...இந்த தி மு க அமைச்சர்களை வெளியில் வந்து வேலை பார்க்க சொல்லுங்க ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X