பொது செய்தி

இந்தியா

8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், 6 - 8 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தி எந்தவித தளர்வும் அறிவிக்கக் கூடாது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம், கேரளா, கர்நாடகா, டில்லி, உத்தர
BalramBhargava, Lockdown, ICMR, Director, பல்ராம் பார்கவா, ஊரடங்கு, ஐசிஎம்ஆர்,

புதுடில்லி: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், 6 - 8 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தி எந்தவித தளர்வும் அறிவிக்கக் கூடாது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம், கேரளா, கர்நாடகா, டில்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறியதாவது:கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, நோய் பாதிப்பு குறைந்து வருகிறது.


latest tamil news


நாடு முழுவதும் உள்ள 718 மாவட்டங்களில், பெரும்பாலான மாவட்டங்களில், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. இந்த சதவீதம் 10க்கும் கீழே குறையும் போது, ஊரடங்கில் தளர்வை அறிவிக்கலாம். கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில், குறைந்தபட்சம் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கில் எந்தவித தளர்வும் அறிவிக்கக் கூடாது. கொரோனா பாசிட்டிவ் விகிதம் முற்றிலும் குறைந்த பிறகே தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
13-மே-202121:16:19 IST Report Abuse
.Dr.A.Joseph வீட்டிலிருக்கும் 8 வாரங்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் .வறுமையில் உள்ள அன்றாட காய்ச்சிகளுக்கு இந்திய அரசாங்கம் உணவுக்கு வழிவகை செய்யுமா? நல்ல பதவியில் இருந்து கொண்டு நிறைய சம்பளம் பெற்று கொண்டு திட்டம் போடாதீர்கள்.
Rate this:
Cancel
13-மே-202117:41:49 IST Report Abuse
ஆப்பு இவருக்கு என்ன? என்ப ஊரடங்கு வந்தாலும் மாசா மாசம் சுளையா சம்பளம் வந்துருது. ஒரு மூணுமாசம் சம்பளம் இல்லாம, வேலையில்லாம வுட்டுக்குள்ளாற இருந்து பாரு. துண்டையும், மண்டையும் பிச்சுக்கிட்டு ஓடுவே...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
13-மே-202115:57:21 IST Report Abuse
vbs manian நம் நாட்டில் நடக்காது.அன்றாட தேவைகளுக்கு வெளியில் வந்துதான் ஆகவேண்டும்.ஏழைகளால் இரண்டுமாத தேவையை ஒரே தவணையில் வாங்க முடியாது.பட்டினியோடு எத்தனை நாள் உள்ளேயே இருக்க முடியும்.கொஞ்சம் மாத்தி யோசிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X