பொது செய்தி

இந்தியா

ரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: மத்திய அரசு ஒப்புதல்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உருவாக்கியுள்ள ஆக்சிகேர் எனப்படும் ஆக்சிஜன் வினியோக உபகரணங்கள் அடங்கிய 1,50,000 தொகுப்புகளை ரூ.322.5 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா சிகிச்சைக்காக பிரதமரின் அவசர கால

புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) உருவாக்கியுள்ள ஆக்சிகேர் எனப்படும் ஆக்சிஜன் வினியோக உபகரணங்கள் அடங்கிய 1,50,000 தொகுப்புகளை ரூ.322.5 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



latest tamil news




மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா சிகிச்சைக்காக பிரதமரின் அவசர கால நிதியில் (பிஎம்-கேர்ஸ் பண்ட்) இருந்து ரூ.322.5 கோடி செலவில் 1,50,000 ஆக்சிகேர் தொகுப்புகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சம் தொகுப்புகள் கைகளால் இயக்கக் கூடியவை; 50 ஆயிரம் தொகுப்புகள் தானியங்கி முறையில் செயல்படக் கூடியவை.

நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைப் பொருத்து ஆக்சிஜனை விநியோகிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளியின் உடல்நிலை அபாயகரமான நிலையை எட்டுவதைத் தவிர்க்கவும் ஆக்சிகேர் உபயோகமாக இருக்கும். அதனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் திறம்பட பயன்படுத்தலாம்.


latest tamil news




ஆக்சிகேரின் அடிப்படை வடிவமானது 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் அழுத்தத்தை சீராக்கி அதன் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் கருவி, ஆக்சிஜன் ஈரப்பதத்துடன் இருப்பதற்கான சாதனம், ஆக்சிஜன் விநியோகத்துக்கான உபகரணம் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.

அதன் இரண்டாவது வடிவத்தில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டரில் மின்னணு கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளன. அவை ஆக்சிஜன் விநியோகத்தை தானாக ஒழுங்குபடுத்தும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிகேர் தொகுப்புகளை அதிக அளவில் தயாரிக்க ஏதுவாக அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்துறையினருக்கு டிஆர்டிஓ ஏற்கெனவே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202117:39:21 IST Report Abuse
ஆப்பு இவ்வளவு நாளா நோண்டி நோண்டி கேள்வி கேட்ட பின் கொஞ்சம் கொஞ்சமா ஃபண்டுலேருந்து ரிலீஸ் பண்றாங்க. மீதிப்பணத்தை செத்துப்போனவங்களை எரிக்கவும், ஆற்றில் மிதக்கும் பிணங்களை அகற்றவும் செலவிடுங்க.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
13-மே-202112:35:36 IST Report Abuse
Dr. Suriya எங்கே அந்த சொங்கிகள் பி எம் கேர்... பி எம் கேர் ன்னு புலம்பியனுவோ...இதுவே காங்கிரசு அரசா இருந்தா கிங் பின்னு ராஜிவ் அறக்கட்டளைக்கு திருப்பியுரப்பாரு... அல்லது கட்டுமர ஆட்சியா இருந்தா கட்டுமர அறக்கட்டளைக்கு போயிருக்கும்.....
Rate this:
Cancel
Durai - Kozhikode,இந்தியா
13-மே-202111:31:42 IST Report Abuse
Durai பிரதமரின் அவசர கால நிதி மிக நிதானமாக மிக முக்கியமான நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X