சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிப்ட் அடிப்படையில் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று காலையில், ஆலையின் இரண்டாவது தளத்தில் இருந்த
Cuddalore, Sipcot, FireAccident, ChemicalPlant, கடலூர், சிப்காட், தொழிற்சாலை, தீ விபத்து, ரசாயனம்

கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிப்ட் அடிப்படையில் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று காலையில், ஆலையின் இரண்டாவது தளத்தில் இருந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் ஆலையை சூழ்ந்த புகையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். எனவே பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.


latest tamil news


மேலும், ஆலையின் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பாய்லர் வெடித்ததால் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
13-மே-202112:05:29 IST Report Abuse
kosu moolai உலக சுற்றுசூழல் காப்பக தலைமையக உள்ள மாநிலத்திலையே இப்படி நடந்துள்ளது அதிர்சியளிக்கிறது
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
13-மே-202112:02:28 IST Report Abuse
siriyaar உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 1 கோடி மற்றும் அரசு வேலை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
13-மே-202112:01:27 IST Report Abuse
siriyaar ஊரடங்கில் எப்படி தொழிற்சாலை இயங்கியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X