பாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
காஸா சிட்டி: பாலஸ்தீனம் மீது தங்களின் தாக்குதலை அதிகரிப்போம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் யூதர்களின் புனித இடமாக இஸ்ரேல் கருதப்படுகிறது. தலைநகர் ஜெருசலேமிற்கு, மூன்று மதத்தினரும் உரிமை கோரி வருகின்றனர். இதனால், அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது. எல்லையில் உள்ள காஸா
Israel, Netanyahu, Palestinian, Gaza, இஸ்ரேல், பாலஸ்தீனம்,தாக்குதல், நெதன்யாகு

காஸா சிட்டி: பாலஸ்தீனம் மீது தங்களின் தாக்குதலை அதிகரிப்போம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் யூதர்களின் புனித இடமாக இஸ்ரேல் கருதப்படுகிறது. தலைநகர் ஜெருசலேமிற்கு, மூன்று மதத்தினரும் உரிமை கோரி வருகின்றனர். இதனால், அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது. எல்லையில் உள்ள காஸா மலைக்குன்று பகுதியில், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும். தற்போது இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 43க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்படும், 13 மாடி கட்டடமான காசா டவரை, இஸ்ரேல் தரைமட்டமாக்கியது.


latest tamil news



இதற்கு பதிலடி தரும்விதமாக, ஹமாஸ் அமைப்பு சுமார் 200 ராக்கெட்டுகளை இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவின. இத்தாக்குதலில் வாகனங்கள், வீடுகள், கட்டடங்கள் என பலவும் தீக்கிரையாயின. இதில் 3 பெண்கள் உட்பட 33 பேர் பலியாயினர். இது தொடர்பாக பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ‛காஸா மீது எங்களின் தாக்குதல் தொடரும். பாலஸ்தீனியர்களை குறி வைத்து தாக்குவோம். எங்கள் தாக்குதலின் பலத்தை நாங்கள் அதிகரிப்போம்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
14-மே-202106:43:58 IST Report Abuse
Muguntharajan உயிர்பலிகள். இதுதான் ஆன்மீகத்தின் பலன். ஆன்மீகம் பாதை மாறிவிட்டது. இந்த மாதிரி ஆன்மீகம் தேவையில்லை.
Rate this:
Cancel
14-மே-202106:33:27 IST Report Abuse
ஆப்பு இங்கேதான் மக்கள் தொகை குறைப்பு ஜோரா நடக்குது. நல்லா குறைங்கடா...
Rate this:
Cancel
14-மே-202105:43:55 IST Report Abuse
ravi chandran சூப்பர் சூப்பர் சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X