பொது செய்தி

இந்தியா

கொரோனா: 'இவர்மெக்டின், பேபிபுளூ' மாத்திரை உற்பத்தி அதிகரிப்பு

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் 'இவர்மெக்டின், பேபிபுளூ' ஆகிய மாத்திரைகளின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, 'இவர்மெக்டின், பேபிபுளூ' ஆகிய மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ்

புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் 'இவர்மெக்டின், பேபிபுளூ' ஆகிய மாத்திரைகளின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, 'இவர்மெக்டின், பேபிபுளூ' ஆகிய மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தினந்தோறும் 12 மி.கி., என, 5 நாட்களுக்கு இவர்மெக்டின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் குறைந்த அளவிலான கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கும், வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கும் பேபிபுளூ மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


latest tamil news



இந்தியாவில் இவர்மெக்டின் மாத்திரையின் தேவை மாதத்துக்கு 7 கோடியாக உள்ளது. பேபிபுளூ மாத்திரைகள் மாதத்துக்கு 16 கோடி அளவில் தேவைப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் இம்மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இவர்மெக்டின் உற்பத்தியை மாதத்துக்கு 30 கோடியாகவும்; பேபிபுளூவின் உற்பத்தி மாதத்துக்கு 40 கோடியாகவும் அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

'எதிர்பார்த்த அளவை விட உபரி அளவாக இந்த மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படுவது உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவுவதோடு, நம் நாட்டின் கொரோனா உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவும் முடியும்' என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
13-மே-202119:18:13 IST Report Abuse
M  Ramachandran தமிழ்நாட்டில் இங்கு ஒரு கேவலமான மோசமான அரசியல் நடக்கிறது . மத்திய அரசாங்கம் எது நல்லது செய்தாலும் ஒன்று எதிர்ப்பது அல்லது அதை மூடி மழுப்புவது. இது இப்போது அல்ல காங்கிரஸ் ஆட்சி நடந்தபோதும் இப்படியே நடந்தது. எதிர்ப்பு மட்டும் அப்போது இல்லை.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
13-மே-202117:54:51 IST Report Abuse
spr இப்படியெல்லாம் ஒன்று இருக்கிறதாக இதுவறை ஒரு செய்தியும் வெளியானதில்லையே பின் எதனால் இவை முன்பே கொடுக்கப்படவில்லை கொரோனா எதிர்ப்போடு தமிழகத்தில் கழக எதிர்ப்பும் அதிகரித்திருக்கும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-மே-202112:47:54 IST Report Abuse
Ramesh Sargam மிக்க மகிழ்ச்சி கூடவே ஆக்சிஜன் உட்பத்தியை பெருக்கினால் ரொம்ப புண்ணியமா போகும். கூடவே மருத்துவ மனைகளில் அதிகம் பெட் வசதி ஏட்படுத்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X