அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் கட்சியில் மேலும் ஒரு மாஜி அதிகாரி விலகல்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள், பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகிய நிலையில், மேலும் ஒரு பொதுச்செயலரான சந்தோஷ்பாபு ஐஏஎஸ் இன்று (மே 13) விலகியுள்ளார்.சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக களமிறங்கிய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற
MNM, Kamalhaasan, SanthoshBabu, General Secretary, Resigned, மக்கள் நீதி மய்யம், பொது செயலாளர், சந்தோஷ் பாபு, விலகல், கமல்ஹாசன்

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள், பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகிய நிலையில், மேலும் ஒரு பொதுச்செயலரான சந்தோஷ்பாபு ஐஏஎஸ் இன்று (மே 13) விலகியுள்ளார்.

சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணிக்கு மாற்றாக களமிறங்கிய நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் போனது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதனையடுத்து, ம.நீ.ம., கட்சியின் துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ்; பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர்.


latest tamil news



இந்நிலையில், ம.நீ.ம., பொதுச்செயலராக இருந்து வந்த சந்தோஷ்பாபுவும் இன்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில்,
‛மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது எனது தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு. கமல்ஹாசன் மற்றும் கட்சியினர் எனக்கு அளித்த பாசத்திற்கும், நட்பிற்கும் நன்றி,' எனப் பதிவிட்டுள்ளார். தகவல் தொடர்புத்துறை செயலராக இருந்த சந்தோஷ்பாபு ஐஏஎஸ், அப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்று ம.நீ.ம.,வில் இணைந்தவர்.


பத்மபிரியாவும் விலகல்


latest tamil news


இதனை தொடர்ந்து, கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பாளராக இருந்துவந்த பத்மபிரியாவும் கட்சியில் இருந்து விலகுவதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு 33,401வாக்குகளைப் பெற்று 3ம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
14-மே-202105:40:37 IST Report Abuse
ocean கமல் நீதி மய்யம் என்ற பெயரை மாற்றி அவரது ராசிக்கு ஒத்துப்போகும் படியான பெயரை வைக்கலாம். தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளால் வறுமை. அகலவில்லை. மக்கள் வருமைக்கோடு ஒழிப்பு கழகம் என ஆரம்பிக்கலாம்.கட்சி என்ற பெயர் காங்கிரஸீடன் ஒட்டியுள்ள பெயர்.அதை பயன்படுத்தக்கூடாது.அதற்கு பதிலாக வறுமைக் கோடு ஒழிப்பு கழகம் என்று அழைக்கலாம்.
Rate this:
Cancel
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
14-மே-202100:09:43 IST Report Abuse
Aanandh மக்கள் நீங்கும் மய்யம். சுடலையிடம் சென்று "மிஷன் அஃகாம்ப்ளிஷ்டு" அறிவித்து, டீலிங் முடித்த அம்பி, மீதி தட்சிணையும் வாங்கிண்டன். கடைசியில், இந்த மாஜி நடிகனும், மய்யத்தைப் பொய்யாக்கிவிட்டு அபீட்
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
13-மே-202123:27:27 IST Report Abuse
தத்வமசி அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்கிற படம் நினைவுக்கு வருகிறது. ஏனோ தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X