அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி, மருந்துகளுக்கு ஜிஎஸ்டி ரத்து: ஸ்டாலின் கோரிக்கை

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்றை தடுக்க தேவையான தடுப்பூசி, மருந்துகளுக்கு மீதான ஜிஎஸ்டியை குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா தொற்றால், அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை
DMK,MKStalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், பிரதமர், முதல்வர், கடிதம், வேண்டுகோள், வெளிநாடு வாழ் தமிழர்கள், நிதி

சென்னை: கொரோனா தொற்றை தடுக்க தேவையான தடுப்பூசி, மருந்துகளுக்கு மீதான ஜிஎஸ்டியை குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா தொற்றால், அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளையும் மாநில அரசுகளே கொள்முதல் செய்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி கவுன்சிலோடு கலந்து ஆலோசனை செய்து, இந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை, குறிப்பிட்ட காலத்திற்கு பூஜிய சதவீதம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடு செய்ய கீழே குறிப்பிட் 3 நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்

1. நிலுவையுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

2. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல் வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள் நிதி இழப்பீட்டை ஈடு செய்ய சிறப்புநிதி உதவி அளிக்கப்பட வேண்டும்.

3. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதம் என்ற அளவில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறி உள்ளார்.


வேண்டுகோள்


latest tamil news


கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்க வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. திடீர், அவசர செலவினங்களுக்காக புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாராளமாக நிதியுதவி வழங்குங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202103:52:02 IST Report Abuse
டுமீலன் நீயெல்லாம் மனிதனா?
Rate this:
Cancel
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
13-மே-202121:35:55 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி சந்தோஷ் பாபு IAS , விருப்ப ஓய்வில் தான் சென்றவர் திரும்பி தமிழக அரசுக்கு விண்ணப்பிக்க போகிறார் , அவர் வந்தவுடன் தான் உங்கள் அடிமை கட்சியின் முன்னாள் மந்திரி உதயகுமாருக்கு ஆப்பு இறுகுடியோ , அதனால் தான் அங்கிருந்து விலகலாம் , நீ சொன்ன விஜயபாஸ்கரை குட்கா விவகாரத்தில் அமித்சாவையே அரெஸ்ட் செய்த கந்தசாமி IPS பார்த்துக்கொள்ளுவார் , இனி தொடரும்
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-மே-202121:28:37 IST Report Abuse
முக்கண் மைந்தன் இந்தியாவுல சேக்காளிங்க ரெண்ண்ட காணுமாமாம், யாருன்னா கண்டுபுடிச்சி குடுங்களேன், ப்ளீஜ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X