பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ஒழிப்பு: கோவையில் தி.மு.க., அமைச்சர்களுடன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைகோர்ப்பு

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
கோவை: கோவையில் இன்று (மே 13) நடந்த கொரோனா தொற்றுத் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க., அமைச்சர்களுடன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து கலந்து கொண்டனர்.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாகக் கோவையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கோவையில் கொரோனா பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அரசு அலுவலர்கள், தொழில்துறைப்
corona prevention, task force in coimbatore, aiadmk mlas with dmk ministers,  கோவையில் கொரோனா ஒழிப்பு, திமுக அமைச்சர்களுடன் அதிமுக எம்எல்ஏக்கள் கைகோர்ப்பு,

கோவை: கோவையில் இன்று (மே 13) நடந்த கொரோனா தொற்றுத் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க., அமைச்சர்களுடன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாகக் கோவையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கோவையில் கொரோனா பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அரசு அலுவலர்கள், தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் ராமச்சந்திரன் (வனத்துறை), சக்கரபாணி (உணவுத்துறை) ஆகியோர் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசினர்.


latest tamil news


இந்தக் கூட்டத்திற்கு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தாமோதரன், செல்வராஜ், மற்றும் அம்மன் அர்ச்சுணன், அருண்குமார், ஜெயராம், அமுல்கந்தசாமி, கந்தசாமி ஆகியோர் காலை நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னரே வந்தனர். ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரத் தாமதமானது.
12 மணிக்கு வந்த அமைச்சர்கள், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களைப் பார்த்து வணக்கம் வைத்தனர். அதன் பின், கூட்ட அரங்க மேடையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., அமைச்சர்களுடன் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் போல பேதமின்றி உரையாடினர்.


latest tamil news


'நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் கோவையில் தி.மு.க., வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரே வெற்றி பெற்றுள்ளனர். கோவையில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், கட்சிப் பாகுபாடு இன்றி தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர்களுடன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது. இது ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு முன்னோட்டம், இது தொடர வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
14-மே-202107:44:32 IST Report Abuse
ramesh நல்ல தொடக்கம் .ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பிறகு இருந்த பகை மாற வேண்டும் .ஒருவருக்கிடையே நல்லிணக்கம் தேவை .நல்ல தொடக்கம் தொடர வாழ்த்துக்கள்
Rate this:
rao - ,
14-மே-202112:30:12 IST Report Abuse
raoits was MK who started the enemity amongst the politicians with vengeful attitude towards his opponents.He started this in 1972 itself when MGR was thrown out of DMK....
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
14-மே-202106:33:09 IST Report Abuse
venkates nandru
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-மே-202103:16:22 IST Report Abuse
Matt P பெரியார் படம் , அண்ணாதுரை படம் எல்லாம் முன்னைய போல இருக்காது போலிருக்கு. அப்பா படம் , மகன் படம் தான் எல்லாத்திலயும் , நேரம் வரும்போது உதயநிதி படமும் சேரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X