சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சூடுபிடிக்கும் செங்குத்து விவசாயம்

Added : மே 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜெர்மனியில் புதிய பசுமைப் புரட்சி தொடங்கிவிட்டது. விவசாய நிலங்களில் அல்ல. நகரின் நடு மையத்தில், பயன்படுத்தப்படாத பழைய கட்டடங்களில், செங்குத்து வேளாண்மை முளைத்திருக்கிறது.'இன்பார்ம்' என்ற முன்னணி செங்குத்து வேளாண் நிறுவனம், தற்போது ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் செங்குத்து விவசாயத்தை பரப்பி வெற்றிகண்டு வருகிறது. பல டஜன் காய்கறி செடிகளை,
 சூடுபிடிக்கும் செங்குத்து விவசாயம்

ஜெர்மனியில் புதிய பசுமைப் புரட்சி தொடங்கிவிட்டது. விவசாய நிலங்களில் அல்ல. நகரின் நடு மையத்தில், பயன்படுத்தப்படாத பழைய கட்டடங்களில், செங்குத்து வேளாண்மை முளைத்திருக்கிறது.

'இன்பார்ம்' என்ற முன்னணி செங்குத்து வேளாண் நிறுவனம், தற்போது ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் செங்குத்து விவசாயத்தை பரப்பி வெற்றிகண்டு வருகிறது. பல டஜன் காய்கறி செடிகளை, ஒரு பெரிய சட்டகத்தில் வைக்கும் அமைப்புகளை இன்பார்ம் உருவாக்குகிறது.

இந்த சட்டகங்களை ஒன்றன் மேல் ஒன்றாக பல மீட்டர் உயரத்திற்கு அடுக்கினால், குறுகிய இடத்தில் பல காய்கறி செடிகளை வளர்க்கலாம்.மேலும், செடிகளுக்கு தேவையான நீர், உரம் போன்றவற்றை விரயமில்லாமல் வழங்க, பல்லாயிரம் உணரிகளும், குழாய்களும் பயன்படுத்தப்படுகின்றன.

செடிகளுக்கு தேவையான ஒளியை எல்.இ.டி விளக்குகள் தருகின்றன. இந்த அமைப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லியமாக கட்டுப்படுத்தலாம். இதனால், நிலத்தில் விளைவதைவிட, இன்பார்மின் அடுக்கு அலமாரி விவசாய முறை, 400 மடங்கு அதிக உற்பத்தியையும், கணிசமான லாபத்தையும் தருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரின் நடுவிலும், புறநகர்களிலும் இன்பார்மின் செங்குத்து விளைச்சல் முறையை பயன்படுத்தினால், நுகர்வோருக்கு பசுமையான காய்கறிகள் பறித்தவுடன் கிடைக்கும். மேலும், போக்குவரத்து செலவும் கணிசமாகக் குறையும். எனவே, விவசாயத்தின் எதிர்காலம் செங்குத்து வளர்ச்சி காணப் போகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Salem,இந்தியா
13-மே-202117:05:15 IST Report Abuse
Krish Farming is now in corporate hand...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X