பொது செய்தி

இந்தியா

கொரோனாவில் மீண்டவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்!

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புது டில்லி: 'கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து குணமடைந்தவர்கள் 6 மாதங்களுக்கு பின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய வெற்றியாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவும் தனது இரண்டு

புது டில்லி: 'கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து குணமடைந்தவர்கள் 6 மாதங்களுக்கு பின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய வெற்றியாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவும் தனது இரண்டு தடுப்பூசிகளை வெளியிட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கொரோனாவில் இருந்து மீள தடுப்பூசி போட்டுக்கொள்வதே தீர்வு என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக அடிக்கடி மக்கள் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது.
தற்போது, பெருவாரியானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்துள்ளனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ஆறு மாதங்களுக்குப் பின்



latest tamil news




இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், 'கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது வலுவான எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பிய பின், மூன்று மாதங்கள் கழித்து எட்டு மாதங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின் தடுப்பூசி செலுத்திக் கொள்வது இன்றியமையாதது' எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்களிடம் கொரோனாவை எதிர்கொள்வதற்கான எதிர்ப்புச் சக்தி வந்து விடும் என ஒரு சிலர் நம்புகின்றனர். இதனால் தொற்றிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்துவது குறித்து அதிக அக்கறைப்படுவது இல்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202121:39:45 IST Report Abuse
சந்திரசேகர் தடுப்பூசி என்ன என்பதை யூ ட்யூப்ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தடுப்பூசி என்பது கொரோனாவின் மருந்து அல்ல.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-மே-202119:38:49 IST Report Abuse
Ramesh Sargam அப்பா, என் கேள்விக்கு ஒரு வழியா பதில் கிடைத்துவிட்டது. நான் முதல் டோஸ் போட்ட பிறகும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளானேன். இப்பொழுது அந்த ஆண்டவன் அருளால் நலமுடன் இருக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். நான் எப்பொழுது இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளவேண்டும் என்று. இந்த செய்தியில் எனக்கு பதில் கிடைத்துவிட்டது. செய்தியை வெளியிட்ட தினமலர் பத்திரிகைக்கு மிக்க நன்றி.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
13-மே-202117:52:56 IST Report Abuse
vnatarajan கோவிஷீல்டு இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு கொரோனா தோற்று வராதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X