கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: ம.பி., முதல்வர் அறிவிப்பு

Added : மே 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
போபால்: கொரோனா தொற்றால் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாமாதம் ரூ.5,000 ரொக்கம், இலவசக் கல்வி, ரேஷன் ஆகியவை வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையை விட 2வது அலையில் பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல குழந்தைகள் கொரோனா
Shivraj Singh, MP_CM, LostParents, Children, Pension, மத்திய பிரதேசம், முதல்வர், சிவராஜ் சிங் சவுகான், கொரோனா, பெற்றோர்கள், குழந்தைகள், நிவாரணம்

போபால்: கொரோனா தொற்றால் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாமாதம் ரூ.5,000 ரொக்கம், இலவசக் கல்வி, ரேஷன் ஆகியவை வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையை விட 2வது அலையில் பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல குழந்தைகள் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் நேற்று (மே 12) ஒரே நாளில் 8,970 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது, 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பெற்றோர்களை அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அம்மாநில அரசு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா பெருந்தொற்றில் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 தொகையுடன் இலவச ரேஷனும் வழங்கப்படும். இத்தகைய குடும்பங்களில் இருந்து பணியாற்ற விரும்புவோருக்கு அரசு உத்தரவாதத்தின் கீழ் கடன்களும் வழங்க முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் அந்த குழந்தைகளை நினைத்தாலே கண் கலங்குகிறது
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
13-மே-202121:18:18 IST Report Abuse
தல புராணம் கும்பமேளா தீயை வெச்சிட்டு பர்னால் தடவுறதுங்குறது இது தானா ..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-மே-202120:00:47 IST Report Abuse
sankaseshan சிரியாரின் சின்னத்தனமான கருத்து .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X