பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மழை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: விதர்பா முதல் தென் தமிழகம் வரை 0.9 கி.மீ., உயரத்தில் நிலவும் வளிமண்டல
சென்னை, தமிழகம், ரெட் அலெர்ட், அதிகனமழை, சென்னை வானிலை மையம்,

சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மழை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: விதர்பா முதல் தென் தமிழகம் வரை 0.9 கி.மீ., உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,


இன்று(மே 13)

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


latest tamil news



மே 14

அரபிக் கடலில் புதியதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் (30 முதல் 40 கி.மீ., வேகத்தில்) கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


மே 15

அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவாவதன் காரணமாக, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மழை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் (30 முதல் 40 கி.மீ., வேகத்தில்) கூடய கன முதல் மிக கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


மே 16

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன்(30 முதல் 50 கி.மீ., வேகத்தில்) கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


மே 17

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் , புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையில்

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை2 8 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


மழை அளவு


கடந்த 24 மணி நேரத்தில், பரூர்(கிருஷ்ணகிரி)-5, சித்தூர்(கன்னியாகுமரி)-4 உத்தமபாளையம்(தேனி) கடம்பூர்(தூத்துக்குடி), சிவலோகம்(கன்னியாகுமரி) தலா 3 அருப்புக்கோட்டை(விருதுநகர்) வேம்பகோட்டை(விருதுநகர்) பாப்பிரெட்டிபட்டி(தர்மபுரி), ஏற்காடு(சேலம்) பகுதிகளில் தலா 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


latest tamil news





மீனவர்களுக்கு

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதன் காரணமாக,


மே 13

குமரிகடல் தென்கிழக்கு அரபிக்கடல்,லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 - 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.


மே 14

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.


மே 15 மற்றும் மே 16

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, தென் மேற்கு அரபிக்கடல் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50- 60 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 70 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
14-மே-202109:36:30 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் சொல்லீட்டிங்களா, வந்த மாதிரிதான்
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
13-மே-202122:14:59 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy முதல்வர் ஸ்டாலின் வந்தார் என்பதை விட மழை வந்து லாக் டவுன் ஆனது கொரானா ஒழிந்தது என பெயர் வராமல் முதல்வர் பார்த்து கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
13-மே-202120:59:56 IST Report Abuse
suresh sridharan லாக் டவுன் ஆடு மாடு குருவி எல்லாம் வெளியே சுற்றுவதில்லை மனித மிருகங்கள் மட்டுமே வெளியே சுற்றுகிறது மழை பெய்தால் ஒருவேளை அடங்கி இருப்பார்களோ அதுவும் சந்தேகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X