பொது செய்தி

இந்தியா

டிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பு: டாக்டர் வி.கே.பால்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாத இடைவெளியில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கிட்டத்தட்ட 18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 26 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் அதிக
தடுப்பூசி, கொரோனா, கொரோனா வைரஸ் கோவிட்

புதுடில்லி: வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாத இடைவெளியில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கிட்டத்தட்ட 18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 26 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் அதிக தடுப்பூசிகள் செலுத்திய நாடுகளில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்களை தடுப்பூசி மூலமாக பாதுகாத்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உயிரிழந்தவர்களில் 88 சதவீதம் பேர் 45 வயதை கடந்தவர்கள். எனவே, இந்த வயதினர்களின் இறப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.


latest tamil news


ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியா வந்துள்ளது. அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம். வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாத இடைவெளியில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ‛இந்தியாவில் 187 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 17.72 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,' எனத் தெரிவித்தார்.


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kijan - Chennai,இந்தியா
13-மே-202121:53:37 IST Report Abuse
kijan தேங்க் யூ மிஸ்டர் வி.கே.பால் ..... உங்க பாஸ் மிஸ்டர் எல்.கே.பால ஒழுங்கா வேலை பார்க்க சொல்லுங்க
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
13-மே-202120:31:04 IST Report Abuse
தல புராணம் அதுக்குள்ளே மோடியின் திட்டப்படி மூணாவது அலை வீசிக்கிட்டு இருக்கும். மக்கள் தான் பாவம், “வேக்சீன் வந்தா சொல்லியனுப்பு... உசிரோடிருந்தா வருகிறேன்.. அவ்வ்வ்..” ன்னு அழுதுக்கிட்டு இறப்பாங்க. ஏற்றுமதி எதுக்கு, மதி இருந்தால் சிந்தி.. ஒப்பந்தங்களில் Force Majeure என்ற க்ஷரத்து இருக்கும் - போர், பெருந்தொற்று, பேரிடர்காலங்களில் ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ளும் சட்ட உரிமை.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
14-மே-202101:34:10 IST Report Abuse
தல புராணம்மக்கள் நலனை விட கார்ப்பரேட் முதலாளிகளின் லாபம் தான் பெரிசுன்னு கமிஷன் அடிக்கும் மோடி அரசாங்கம், உள்நாட்டில் மக்கள் சாகும் போது 84% உற்பத்தியை ஏற்றுமதி செய்து உண்டியல் நிரப்பிக்கொள்கிறார்.....
Rate this:
Cancel
13-மே-202117:58:47 IST Report Abuse
ஆரூர் ரங் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் பயோடெக் தனது கோவாக்சின் கூடுதல் தயாரிப்புக்காக ஒரு பழைய மருந்து ஆலையை கையகப்படுத்தி உற்பத்தியை துவங்க முயன்ற போது😝 காங்கிரஸ் சிவசேனா கூட்டணி அரசு அனுமதிக்க மறுத்துவிட்டது . ஆனால் அன்னிய தடுப்பூசி இறக்குமதிக்கு முயல்கிறது. டாலரில் ஆட்டையை😟 போட்டு காசு பார்க்கதான் .
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
14-மே-202101:35:28 IST Report Abuse
தல புராணம்அதிலே 84% ஏற்றுமதி பண்ண வெச்சி டாலரில் மோடி உண்டியல் நிரம்பணுமா ?? Force Majeure கிளாசில் ஏற்றுமதியை நிறுத்த சொல்லேன்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X