பொது செய்தி

தமிழ்நாடு

போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது: ஸ்டாலின்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
சென்னை: 'கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுகிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விரிவாக விவாதிப்பதற்காக, சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்தில் உள்ள கூட்ட
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: 'கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுகிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விரிவாக விவாதிப்பதற்காக, சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி, முனிரத்னம், பா.ஜ.,வின் நயினார் நாகேந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கொரோனாவை தடுக்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தேன். அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளை பெறவே இந்த கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு முயற்சிகளால் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்படுகின்றன. ஒடிசா, மே.வங்கத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர அழுத்தம் கொடுக்கப்பட்டு பலன் கிடைத்து உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே வருகின்றனர். கொரோனா பாதித்தோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் செலவை தமிழக அரசே ஏற்கும்.


latest tamil news


கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வழங்குவதை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சர்வதேச அளவில் டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
14-மே-202123:18:47 IST Report Abuse
Arachi சிலபேர் முற்போக்கு அல்ல பிற்போக்கு அல்ல புறம்போக்குகள்.நல்ல ஆட்சி பிடிக்கதே ஆராய்ச்சி
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
14-மே-202111:30:29 IST Report Abuse
Dr. Suriya "போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது".... ஓ...ஹோ... இதுதான் போர் கால அடிப்படையா....ஆனா அதையும் மீறி
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-மே-202110:12:50 IST Report Abuse
RajanRajan மொத்தமும் கழன்று ஓடுது அரசு எந்திரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X